தம்மை நம்புவோருக்கு யெகோவா உதவுகிறார்
1 பணம், செல்வாக்கு, திறமைகள் இவை எல்லாம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். (சங். 12:4; 33:16, 17; 49:6) என்றாலும், யெகோவாவுக்குப் பயந்து, அவர்மீது நம்பிக்கை வைப்போருக்கு பைபிள் பின்வருமாறு உறுதியளிக்கிறது: “அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.” (சங். 115:11) யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கான இரண்டு விஷயங்களை நாம் கவனிப்போம்.
2 கிறிஸ்தவ ஊழியர்களாக: சபையில் கற்பிக்கும் பொறுப்புகளை கையாளுகையிலும், வெளி ஊழியத்தில் போதிக்கையிலும் நாம் கடவுளை சார்ந்திருக்க வேண்டும். இயேசுவின் உதாரணத்தை கவனியுங்கள். அவர் கடவுளுடைய குமாரனாக இருந்தாலும்கூட, தம் சொந்த ஞானத்திலோ திறமையிலோ சார்ந்திருக்கவில்லை; மாறாக தம் பரலோக தகப்பனையே முற்றிலும் சார்ந்திருந்தார். (யோவா. 12:49; 14:10) அப்படியானால் நாமும் பரம தகப்பனை சார்ந்திருப்பது மிக மிக அவசியமல்லவா! (நீதி. 3:5-7) நம்மால் முடிந்தவரை நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தால்தான் அவருக்கு கனம் சேரும், மற்றவர்களும் பயனடைவார்கள்.—சங். 127:1, 2, 3.
3 நாம் யெகோவாவை சார்ந்திருப்பதை எப்படி காட்டுகிறோம்? அவருடைய வழிநடத்துதலுக்காகவும், பரிசுத்த ஆவியின் உதவிக்காகவும் ஜெபிப்பதன் மூலமே. (சங். 105:4; லூக். 11:13) அத்துடன், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் போதிப்பதன் மூலமாகவும் அவர்மீது சார்ந்திருப்பதை காட்டுகிறோம். பைபிளிலுள்ள செய்தி, மக்களின் இதயங்களைத் தொட்டு அவர்களது வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. (எபி. 4:12) நாம் ‘தேவன் தந்தருளும் பெலத்தின்படி ஊழியம் செய்கையில்,’ யெகோவாவுக்கே மகிமை சேருகிறது.—1 பே. 4:11.
4 பிரச்சினைகளை கையாளுகையில்: அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்ப்படுகையிலும்கூட உதவிக்காக யெகோவாவையே சார்ந்திருக்க வேண்டும். (சங். 46:1) உதாரணமாக, வேலை செய்யுமிடத்தில் முதலாளி, மாநாட்டிற்குச் செல்வதற்கு விடுப்பு தர தயங்கலாம்; அல்லது நம் குடும்ப வாழ்க்கையில் சிரமமான ஒரு சூழ்நிலையை சந்திக்கலாம். அப்போது, யெகோவாவிடம் உருக்கமாக ஜெபிப்பதாலும், அவரது வார்த்தை மற்றும் அமைப்பின் மூலமாக அவர் அளித்திருக்கும் வழிநடத்துதலைப் பின்பற்றுவதாலும் யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கையை காட்டுகிறோம். (சங். 62:8; 119:143, 173) இவ்வாறு செய்கையில், யெகோவாவின் ஊழியர்கள் அவரது உதவியை தங்கள் வாழ்க்கையில் ருசிக்கிறார்கள்.—சங். 37:5; 118:13, 16.
5 யெகோவாவே நமக்கு இப்படியாக உறுதி அளிக்கிறார்: ‘யெகோவாமேல் நம்பிக்கை வைத்து, யெகோவாவைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.’ (எரே. 17:7) எனவே, நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் யெகோவாவின் மீது நம்பிக்கை இருப்பதை வெளிக்காட்டுவோமாக!—சங். 146:5.