எக்காலத்திற்கும் பயனுள்ள செய்தியுடன் ஒரு வீடியோ
தாவீது—கடவுள் மீது நம்பிக்கை வைத்தார் என்ற ஆங்கில வீடியோவில் என்ன செய்தி உள்ளது? தாவீதைப் போல நாமும் யெகோவா மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே. (சங். 91:2) தாவீதின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் சித்தரிக்கப்படுவதைப் பார்ப்பது பிள்ளைகளும் சரி, பெரியவர்களும் சரி, அவருடைய முன்மாதிரியிலிருந்து நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும். (சங். 31:14) நமக்கு மேலும் பயனளிக்கும் விதத்தில் இந்த DVD-யில் “வீடியோ வினாடிவினா”வும் பல ‘கற்கும் முறைகளும்’ உள்ளன.
வீடியோவைப் பாருங்கள், பிறகு பின்வரும் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: (1) யெகோவா ஏன் வேறொரு சிறந்த ராஜாவைத் தேர்ந்தெடுத்தார்? (1 சா. 15:10, 11; 16:1) (2) அவர் ஏன் தாவீதின் சகோதரர்களில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கவில்லை? (1 சா. 16:6, 7) (3) தாவீது சுரமண்டலம் வாசித்தது சவுலுக்கு ஏன் பிரியமாய் இருந்தது? (1 சா. 16:14-23) (4) கோலியாத் யார்? (1 சா. 17:4-10) (5) கோலியாத்தை எதிர்த்துப் போரிட தாவீது ஏன் விரும்பினார்? (1 சா. 17:23, 24, 36, 37) (6) யோனத்தான் யார்? (1 சா. 14:1) (7) சவுல் எந்தச் சந்தர்ப்பத்தில் தாவீதின் பரம எதிரியானார்? (1 சா. 18:25-29) (8) தாவீது ஏன் சவுலைக் கொல்லவில்லை? (1 சா. 26:7-11) (9) சவுல் எப்படி இறந்தார்? (1 சா. 31:1-6) (10) யோனத்தான் இறந்தபோது தாவீது எப்படி உணர்ந்தார்? (2 சா. 1:11, 12) (11) தாவீதுக்கு யெகோவா என்ன வாக்குறுதி அளித்தார்? (2 சா. 7:12, 13, 16) (12) தாவீது மோசமான என்ன தவறைச் செய்தார்? (2 சா. 11:1-5, 14-17) (13) செய்த தவற்றிற்காக பெரிதும் துக்கித்ததை தாவீது எப்படிக் காட்டினார்? (சங். 51) (14) தாவீது என்ன முக்கிய விஷயங்களை இளம் சாலொமோனுக்குக் கற்றுக்கொடுத்தார்? (1 இரா. 2:1-4; 1 நா. 22:6-13; 28:9, 10) (15) இயேசுவின் ஆட்சி தாவீதுக்கும் யோனத்தானுக்கும் உங்களுக்கும் எப்படிப் பயனளிக்கப் போகிறது?—ஏசா. 11:6-9; யோவா. 11:25, 26.
இப்போது சிந்தித்துப் பாருங்கள்: தாவீதைப் போல நீங்கள் எப்படி யெகோவாவின் மீது தனிப்பட்ட விதத்தில் நம்பிக்கை வைக்கலாம்?
பெற்றோர்களே, தாவீதைப் போல் எப்போதும் கடவுள் மீது நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளின் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள்.—சங். 56:11.