உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 2 பக். 4-5
  • கடவுளுடைய அரசாங்கம் நமக்கு ஏன் தேவை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய அரசாங்கம் நமக்கு ஏன் தேவை?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனித ஆட்சி உருவெடுக்கிறது
  • ஆட்சியில் மாற்றம் விரைவில்!
  • கடவுளுடைய ராஜ்யம்—பூமியின் புதிய அரசாங்கம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுள் அனுமதித்திருக்கும் துன்பத்திற்கு முடிவு அருகில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உங்களை உட்படுத்துகிற ஒரு விவாதம்
    உண்மையான சமாதானம்
  • யெகோவாவின் ஆட்சியே சரியானது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 2 பக். 4-5
ஏதேன் தோட்டத்தில் பாய்ந்தோடும் அருவியை ஆதாமும் ஏவாளும் ரசித்துப் பார்க்கிறார்கள்.

கடவுளுடைய ஆட்சியில், படைப்புகள் எல்லாமே ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன

கடவுளுடைய அரசாங்கம் நமக்கு ஏன் தேவை?

மனிதர்கள் படைக்கப்பட்ட சமயத்தில் ஒரே ஒரு ஆட்சியாளர்தான் இருந்தார். அவர்தான் நம்மைப் படைத்த கடவுள். அவருடைய பெயர் யெகோவா. அவர் அன்பான ஆட்சியாளர். மனிதர்கள் குடியிருப்பதற்கு ஏதேன் தோட்டத்தை ஒரு அழகான வீடாகக் கொடுத்தார். அவர்கள் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவைக் கொடுத்தார். அதுமட்டுமா? மனதுக்குத் திருப்தியான வேலையையும் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28, 29; 2:8, 15) மனிதர்கள் கடவுளுடைய அன்பான ஆட்சியை ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருந்தால், அவர்கள் இன்றுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பார்கள். ஆனால், என்ன நடந்தது?

சாப்பிடக் கூடாது என்று கடவுள் சொன்ன பழத்தை, ஆதாமுக்கு ஏவாள் கொடுத்திருக்கிறாள்; அதை அவன் கையில் பிடித்திருக்கிறான்.

ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆட்சியை ஒதுக்கித்தள்ளினார்கள்

ஒரு தேவதூதன் கடவுளை எதிர்த்தான். மனிதர்களை ஆட்சி செய்ய கடவுளுக்கு உரிமை இல்லை என்று அவன் சொன்னான். அவன்தான் பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய ஆட்சியோ உதவியோ இல்லாமல் மனிதர்களால் சந்தோஷமாக வாழ முடியும் என்று அவன் சொல்லாமல் சொன்னான். வருத்தமான விஷயம் என்னவென்றால், நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும், சாத்தானுடைய பேச்சைக் கேட்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள்.—ஆதியாகமம் 3:1-6; வெளிப்படுத்துதல் 12:9.

ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆட்சியை ஒதுக்கித்தள்ளியதால், தங்களுடைய அழகான வீட்டை இழந்தார்கள். எந்தக் குறையும் இல்லாமல் என்றென்றைக்கும் ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பையும் இழந்துவிட்டார்கள். (ஆதியாகமம் 3:17-19) அவர்கள் எடுத்த தவறான தீர்மானத்தால், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் எல்லாருமே பாதிக்கப்பட்டார்கள். எப்படி? ஆதாம் செய்த பாவத்தினால், “பாவமும் . . . மரணமும் இந்த உலகத்தில் வந்தது” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12) அதோடு, பாவத்தினால் இன்னொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.” (பிரசங்கி 8:9) மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும்போது, அவர்களுக்கு பிரச்சினைகள்தான் மிஞ்சும்!

மனித ஆட்சி உருவெடுக்கிறது

நிம்ரோது திமிராக நிற்கிறான். பின்புறத்தில், மக்கள் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறார்கள்.

நிம்ரோது யெகோவாவை எதிர்த்தான்

மனிதர்களை ஆட்சி செய்த முதல் மனிதன் நிம்ரோது என்று பைபிள் சொல்கிறது. அவன் யெகோவாவுடைய ஆட்சியை எதிர்த்தான். நிம்ரோதின் காலத்திலிருந்தே, அதிகாரம் படைத்தவர்கள் மக்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள். ‘அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைப் பார்த்தேன்; அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. அவர்களை அடக்கி ஒடுக்கியவர்களுக்கு அதிகாரம் இருந்தது’ என்று கிட்டத்தட்ட 3,000 வருஷங்களுக்கு முன்பே சாலொமோன் ராஜா சொன்னார்.—பிரசங்கி 4:1.

இன்றைக்கும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. “இன்று உலகத்தில் நடக்கிற கெட்ட காரியங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முக்கியமான காரணம் மோசமான ஆட்சிதான் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்” என 2009-ல் ஐ.நா. சபை வெளியிட்ட பிரசுரம் ஒன்று சொல்கிறது.

ஆட்சியில் மாற்றம் விரைவில்!

இந்த உலகத்தை ஆட்சி செய்ய சிறந்த ஆட்சியாளர்களும், நல்ல அரசாங்கமும் தேவை. இதை நிறைவேற்றுவதாக நம் படைப்பாளர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.

படங்களின் தொகுப்பு: மனித அரசாங்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள். 1. ஆசியாவிலுள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த பெண், அழுதுகொண்டிருக்கும் தன் குழந்தையைக் கையில் வைத்தபடி, அசுத்தமான தெரு ஒன்றில் உட்கார்ந்திருக்கிறாள். 2. வயதான ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 3. போர்க்களத்தில் போர் வீரர்கள் துப்பாக்கியால் சுடுகிறார்கள். 4. போராட்டம் செய்கிறவர்கள் கையில் பேனர்களைப் பிடித்தபடி கோபமாகக் கத்துகிறார்கள். 5. அம்மாவும் மகளும் வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டு, தங்கள் வீட்டுக் கதவிலிருக்கும் கண்ணாடியை யாரோ உடைத்திருப்பதைப் பார்க்கிறார்கள். 6. புகைப்போக்கிகளும் மின்சார கேபிள்களும் இருக்கும் புகைப்பனி நிறைந்த நகரம்

சில நல்ல மனித அரசாங்கங்கள்கூட மனிதர்களுடைய முக்கியமான பிரச்சினைகளைச் சரிசெய்யவில்லை

கடவுள் ஒரு ராஜ்யத்தை, அதாவது அரசாங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது எல்லா மனித ஆட்சியையும் நீக்கிவிட்டு, “அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.” (தானியேல் 2:44) இந்த அரசாங்கத்துக்காகத்தான் லட்சக்கணக்கான மக்கள் ஜெபம் செய்துவந்திருக்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) ஆனால், கடவுள் இந்த அரசாங்கத்தின் ஆட்சியாளராக இருக்க மாட்டார். மனிதராக வாழ்ந்த ஒருவரை அதன் ஆட்சியாளராக அவர் நியமித்திருக்கிறார். அவர் யார்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்