நம் அதிகாரப்பூர்வ வெப்சைட்—நமக்கும் மற்றவர்களுக்கும்
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை “உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்க” வேண்டுமென்று இயேசு நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். (மத். 24:14) ‘நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்காக,’ watchtower.org, jw-media.org, jw.org ஆகிய வெப்சைட்டுகள் ஒன்றிணைக்கப்பட்டு jw.org என்ற புதிய வெப்சைட்டாக உருவாக்கப்பட்டிருக்கிறது.—2 தீ. 4:5.
“உலகமெங்கும்”: உலக ஜனத்தொகையில் சுமார் மூன்றிலொரு பகுதியினர் இன்டர்நெட்டை உபயோகிக்கிறார்கள். அநேகருக்கு அது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது, குறிப்பாக இளைஞர்களுக்கு! இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்கள் நம்முடைய வெப்சைட்டிலிருந்து பைபிள் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம். யெகோவாவின் அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம், இலவச வீட்டு பைபிள் படிப்புக்கு சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த விதத்தில், நற்செய்தி சென்றெட்ட கடினமாக உள்ள இடங்களுக்கெல்லாம் அது எட்ட இன்டர்நெட் துணைபுரிகிறது.
“எல்லாத் தேசத்தாருக்கும்”: பைபிள் சத்தியம் ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ தெரிய வேண்டுமென்றால், அது பல்வேறு மொழிகளில் கிடைக்க வேண்டும். வேறு எந்த வெப்சைட்டையும்விட jw.org வெப்சைட்டில்தான் சுமார் 400 மொழிகளில் வெகு எளிதாகத் தகவல்களைப் பார்க்க முடியும்.
தாராளமாகப் பயன்படுத்துங்கள்: jw.org வெப்சைட் சாட்சி கொடுக்கும் வேலைக்காக மட்டும் அல்ல, யெகோவாவின் சாட்சிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இன்டர்நெட்டைப் பார்க்கும் வசதி இருந்தால், jw.org வெப்சைட்டைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறோம். அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான சில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
[பக்கம் 3-ன் படம்]
முயன்று பாருங்கள்
1 இங்கே www.jw.org என்று டைப் செய்யுங்கள்.
2 முக்கியப் பிரிவுகள், மெனு ஆப்ஷன்கள், இணைப்புகளை கிளிக் செய்து நிறைய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
3 உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களில் இன்டர்நெட் இணைப்பு இருந்தால், jw.org வெப்சைட்டை அவற்றில் பாருங்கள். ஸ்க்ரீன் ஸைஸுக்கு ஏற்றார்போல் வெப்சைட் பக்கங்களைப் பார்க்க முடியும்.