கேள்விப் பெட்டி
◼ வீட்டு வாசலில் பைபிள் படிப்பு நடத்தும்போது பிரஸ்தாபியாக இருக்கும் சகோதரரை அழைத்துச் செல்லும் சகோதரி முக்காடு போட வேண்டுமா?
ஒரு சகோதரர் முன்னிலையில் ஒரு சகோதரி முறையான பைபிள் படிப்பு நடத்தினால் முக்காடு போட வேண்டும். (1 கொ. 11:3-10) ஜூலை 15, 2002 காவற்கோபுரம் பக்கம் 27 இப்படிச் சொல்கிறது: “இது முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட போதனை நேரம், அங்கு படிப்பு நடத்துகிறவரே உண்மையில் தலைமை தாங்குகிறார். இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு படிப்பும் சபையில் உள்ள ஏற்பாட்டைப் போலவே இருக்கிறது. சாட்சியாக இருக்கும் முழுக்காட்டப்பட்ட ஆணின் முன்னிலையில் முழுக்காட்டப்பட்ட ஒரு பெண் படிப்பு நடத்தும்போது அவள் முக்காடிடுவது பொருத்தமானது.” வீட்டிலோ, வீட்டு வாசற்படியிலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ பைபிள் படிப்பு நடத்தப்பட்டாலும் முக்காடு போட வேண்டும்.
ஆனால், வீட்டு வாசலில் நடத்தப்படும் பைபிள் படிப்பு முறையான படிப்பாக ஆரம்பிக்கப்படாவிட்டால் அந்தச் சகோதரி முக்காடு போட வேண்டிய அவசியமில்லை. மறுசந்திப்பு செய்கையில், பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும் என்று நடித்துக் காட்டினாலும் சரி பைபிள் படிப்பிற்கான பிரசுரங்களில் ஒரு பகுதியைக் கலந்தாலோசித்தாலும் சரி, முக்காடு போட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும், தொடர்ந்து மறுசந்திப்பு செய்யும்போதுதான் வீட்டு வாசலில் நடத்தப்படும் படிப்பு முறையான பைபிள் படிப்பாக மாறும்; எனவே சூழ்நிலையைப் பொறுத்து எப்போது முக்காடு போடுவது என்று பிரஸ்தாபி தீர்மானிக்க வேண்டும்.