ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பத்திரிகை மார்க்கம்
ஏன் முக்கியம்? நிறைய பேர் நம் பத்திரிகையை விரும்பி படிக்கிறார்கள். ஆனால், பைபிள் படிப்பு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை, ‘என்னோட மதமே எனக்கு போதும்’ என்று அவர்கள் நினைக்கலாம். இல்லை என்றால், ‘பைபிள் படிப்புக்கெல்லாம் நேரம் இல்லை’ என்று நினைக்கலாம். ஆனால், நம் பத்திரிகைகளை படிக்க படிக்க, பைபிளை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வரலாம். (1 பே. 2:2) ஏதாவது ஒரு கட்டுரை அவர்கள் மனதை தொடலாம். ஒருவேளை அவர்களுடைய சூழ்நிலை மாறலாம். அதனால், நாம் அடிக்கடி அவர்களை போய் பார்த்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தால், அவர்களும் நம்மிடம் மனம் திறந்து பேச ஆரம்பிப்பார்கள். அதை வைத்து அவர்களுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். இப்படி அடிக்கடி பேசினால், காலப்போக்கில் அவர்களுக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்க முடியும்.
இந்த மாதம் இதை செய்து பாருங்கள்:
யாருக்கெல்லாம் பத்திரிகைகளை கொடுக்கலாம் என்று பட்டியல் போடுங்கள். புது பத்திரிகைகள் கிடைத்ததும் அவர்களுக்கு கொடுங்கள். அடுத்த முறை, வேறு பத்திரிகைகளை கொண்டு வந்து தருவதாக சொல்லுங்கள்.