உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூன் பக். 3
  • யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • “யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • சங்கீதம் 37:4—“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”.
    பைபிள் வசனங்களின் விளக்கம்
  • யெகோவாவை உங்கள் நம்பிக்கையாகக் கொண்டிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • முடிவு நெருங்கி வருவதால் யெகோவாவை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூன் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 34-37

யெகோவாவை நம்புங்கள், நல்லதையே செய்யுங்கள்

“நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே”

37:1, 2

  • கெட்டவர்கள் வெற்றியடைவதை பார்த்து ஏமாந்துவிடாமல் யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள். இன்னும் யெகோவாவுக்காக என்ன செய்யலாம் என்றும், அவர் தரும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள்

“கர்த்தரை நம்பி நன்மைசெய்”

37:3

  • கவலைகளை சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்று நம்புங்கள். அவருக்கு எப்போதும் உண்மையாக இருக்க உங்களுக்கு உதவி செய்வார்

  • கடவுளுடைய அரசாங்கத்தின் சந்தோஷமான செய்தியை எல்லாருக்கும் சொல்லுங்கள், அந்த வேலையை சுறுசுறுப்பாக செய்யுங்கள்

“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”

37:4

  • யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள பைபிளை படித்து அதில் இருக்கும் விஷயங்களை யோசித்துப் பாருங்கள். அதற்கு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குங்கள்

“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து [அதாவது, ஒப்படைத்துவிடு]”

37:5, 6

  • எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்று முழு நம்பிக்கையோடு இருங்கள்

  • யெகோவாவை வணங்குவதால் நம்மைப் பற்றி மற்றவர்கள் தவறாக பேசலாம், அடிக்கலாம் அல்லது கேலி கிண்டல் செய்யலாம். அப்போது, நாம் பதிலுக்கு எதையும் செய்யாமல் நல்லதையே செய்ய வேண்டும்

“கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு”

37:7-9

  • அவசரப்பட்டு தவறாக எதையாவது செய்தால், சந்தோஷத்தையும் யெகோவா தரும் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம்

‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்’

37:10, 11

  • யாராவது உங்களிடம் அநியாயமாக நடந்துகொண்டால் கோபப்படாமல், யெகோவா அதை சரி செய்யும்வரை பொறுமையாக காத்திருங்கள்

  • சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இருங்கள். வேதனையில் மூழ்கி இருப்பவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள். பூஞ்சோலை பூமியில் சீக்கிரத்தில் கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்

தேவதூதருடைய கைகள் பூஞ்சோலை பூமியின் மீது நீட்டப்பட்டு இருக்கிறது

கடவுளுடைய அரசாங்கம் நாம் நினைப்பதைவிட நிறைய ஆசீர்வாதங்களை தரப்போகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்