பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 60-68
ஜெபத்தை கேட்பவரான யெகோவாவைப் புகழுங்கள்
யெகோவாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரிடம் ஜெபம் செய்யுங்கள்
நம்முடைய வாக்குறுதிகளை பற்றி ஜெபம் செய்தால், அதை நிறைவேற்றுவதற்கு முழு முயற்சி எடுப்போம்
ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன், இனி யெகோவாவுக்காக வாழ்வோம் என்று அவரிடம் சொன்னதுதான், நாம் கொடுத்த மிக முக்கியமான வாக்குறுதி
அன்னாள்
மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டுங்கள், அவர் அதை சரி செய்வார் என்று நம்புங்கள்
நம் மனதில் இருக்கும் ஆழமான எண்ணங்களை யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்வதுதான், உருக்கமான ஜெபம்
நமக்கு என்ன தேவையோ அதை குறிப்பாக சொல்லி ஜெபம் செய்யும்போது, அதற்கு யெகோவா கொடுக்கும் பதிலை நம்மால் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்
இயேசு
நல்ல மனம் உள்ள ஆட்கள் செய்யும் ஜெபத்தை யெகோவா கேட்கிறார்
யெகோவாவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அவர் விரும்புகிறதை செய்ய வேண்டும் என்று நினைக்கும் எல்லாருடைய ஜெபங்களையும் அவர் கேட்கிறார்
நாம் எப்போதும் ஜெபத்தில் யெகோவாவிடம் பேசலாம்
கொர்நேலியு
நான் ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்ல நினைக்கும் விஷயங்கள்: