பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 120–134
“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
120-லிருந்து 134 வரை உள்ள சங்கீதங்கள் “ஏறுதலின் பாடல்கள்” என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருஷமும் பண்டிகைகளை கொண்டாட இஸ்ரவேலர்கள் சந்தோஷத்தோடு யூதாவின் மலைகளில் இருந்த எருசலேமுக்கு ஏறி போவார்கள். அப்போது இந்த பாடல்களை அவர்கள் பாடியிருக்கலாம்.
யெகோவா தரும் பாதுகாப்பை இந்த வார்த்தைகள் அழகாக வர்ணிக்கின்றன . . .
கண் விழித்து காக்கும் மேய்ப்பன்
சூரிய ஒளியிலிருந்து காக்கும் நிழல்
உண்மையான போர் வீரன்