உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 நவம்பர் பக். 3
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠மறுசந்திப்பு செய்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠மறுசந்திப்பு செய்வது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... மறுசந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... ஆர்வத்தை வளர்ப்பதற்கு ஒரு கேள்வியைக் கேளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • தயாரித்தல்—திறம்பட்ட மறுசந்திப்புகளுக்கு முக்கிய வழி
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 நவம்பர் பக். 3

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... மறுசந்திப்பு செய்வது

ஏன் முக்கியம்: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்கிற நிறையப் பேர், கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். (ஏசா 55:6) அவர்களுக்குப் படிப்படியாகக் கற்றுக்கொடுக்க, நாம் திரும்பத் திரும்ப அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருப்பதால், அவரவருக்கு ஏற்றபடி நாம் பேச வேண்டும். ஆனாலும், இன்னும் சிறப்பாக மறுசந்திப்பு செய்வதற்கு நாம் நன்றாகத் தயாரிக்க வேண்டும்... ஒவ்வொரு முறையும் ஒரு குறிக்கோளை மனதில் வைத்திருக்க வேண்டும்... எப்படியாவது பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் லட்சியத்தோடு இருக்க வேண்டும்.

மறுசந்திப்புக்காக ஒரு சகோதரி தயாரிக்கிறார்

எப்படிச் செய்வது:

மறுசந்திப்பு செய்யும்போது இரண்டு சகோதரிகள் ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டுகிறார்கள்
  • உடனுக்குடன், ஒருவேளை ஒருசில நாட்களுக்குள், மறுசந்திப்பு செய்ய முயற்சி செய்யுங்கள்.—மத் 13:19

  • நட்போடு பழகுங்கள், மரியாதை காட்டுங்கள், பதட்டப்படாதீர்கள்

  • அன்போடு வாழ்த்து சொல்லி ஆரம்பியுங்கள். அந்த நபருடைய பெயரைப் பயன்படுத்துங்கள். நீங்கள் மறுபடியும் வந்திருப்பதற்கான காரணத்தை ஞாபகப்படுத்துங்கள். அதாவது, ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல, புதிய பத்திரிகையைக் கொடுக்க, நம்முடைய வெப்சைட்டைக் காட்ட, ஒரு வீடியோவைக் காட்ட, அல்லது பைபிள் படிப்பை நடித்துக் காட்ட வந்திருப்பதாகச் சொல்லுங்கள். அவர் வேறு விஷயத்தில் ஆர்வம் காட்டினால் அதற்கு ஏற்றபடி பேசுங்கள்.—பிலி 2:4

  • ஒரு வசனத்தைக் காட்டுவதன் மூலமோ ஒரு பிரசுரத்தைக் கொடுப்பதன் மூலமோ, அவருடைய இதயத்தில் விதைக்கப்பட்ட சத்திய விதைக்குத் தண்ணீர் ஊற்றுங்கள். (1கொ 3:6) அவரோடு நன்றாகப் பழகுங்கள்

  • அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்