உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 பிப்ரவரி பக். 3
  • கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • ‘நீதிமான்கள் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • “இதோ! ... எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • கிறிஸ்தவத்தின் எதிர்காலம் என்ன?
    விழித்தெழு!—2007
  • ஒரே உண்மையான கிறிஸ்தவ மதம் சாத்தியமே
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 பிப்ரவரி பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 12-13

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமை

கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையை இயேசு ஏன் சொன்னார்? கோதுமை வகுப்பைச் சேர்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரையும் மற்ற மனிதர்களிலிருந்து எப்போது, எப்படி பிரித்தெடுப்பார் என்பதைக் காட்டுவதற்காக அதைச் சொன்னார். விதைப்பது கி.பி. 33-ல் ஆரம்பித்தது.

விதைக்கப்படுவது, அறுவடை செய்யப்படுவது, மற்றும் களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்படுவது எப்போது நடந்தது என்பதைக் காட்டும் படம்

13:24

‘ஒரு மனுஷன் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்தான்’

  • விதைப்பவர்: இயேசு கிறிஸ்து

  • நல்ல விதை விதைக்கப்படுவது: இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவது

  • நிலம்: உலகத்திலுள்ள மனிதர்கள்

13:25

‘ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய எதிரி வந்து களைகளை விதைத்தான்’

  • எதிரி: பிசாசு

  • ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தது: அப்போஸ்தலர்களின் மரணம்

13:30

“அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்”

  • கோதுமை: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

  • களைகள்: போலி கிறிஸ்தவர்கள்

‘முதலில் களைகளைப் பிடுங்குங்கள் . . . பின்பு கோதுமையை . . . சேர்த்து வையுங்கள்’

  • வேலைக்காரர்கள்/அறுவடை செய்கிறவர்கள்: தேவதூதர்கள்

  • களைகள் பிடுங்கப்படுவது: போலி கிறிஸ்தவர்கள் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிலிருந்து பிரிக்கப்படுவது

  • களஞ்சியத்தில் சேர்த்து வைப்பது: பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்படுவது

அறுவடைக் காலம் ஆரம்பமானபோது, போலி கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை எது வித்தியாசப்படுத்திக் காட்டியது?

இந்த உவமையைப் புரிந்துகொள்வதால் எனக்கு என்ன நன்மை?

உங்களுக்குத் தெரியுமா?

கோதுமையும் களைகளும் சேர்ந்தே வளர்கிறது

இந்த உவமையில் சொல்லப்படும் களைகள், டார்னல் என்ற விஷச் செடிகளாக இருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. கோதுமைப் பயிர் ஆரம்பப் பருவத்தில் பார்ப்பதற்கு எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்தச் செடிகளும் இருக்கும். கோதுமைப் பயிரும் களைகளும் சேர்ந்து வளரும்போது, அவற்றின் வேர்கள் பின்னிப்பிணைந்துவிடும். அதனால், களைகளை மட்டும் தனியாகப் பிடுங்க முடியாது. ஆனால் களைகள் நன்றாக வளர்ந்த பிறகு, அவற்றைச் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்துப் பிடுங்கிப்போட முடியும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்