உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 மார்ச் பக். 7
  • “விழிப்புடன் இருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “விழிப்புடன் இருங்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • நீங்கள் “விழிப்புடன்” இருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • விழிப்போடு இருக்க வேண்டும்—கன்னிப்பெண்கள் உவமை
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்துகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ‘உண்மையுள்ள அடிமை’ சோதனையில் தேறுகிறது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 மார்ச் பக். 7
இயேசு சொன்ன உவமையில் வரும் பத்து கன்னிப்பெண்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 25

“விழிப்புடன் இருங்கள்”

25:1-12

பத்து கன்னிப்பெண்களைப் பற்றிய உவமையை பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு இயேசு சொல்லியிருந்தாலும், அதிலிருக்கிற குறிப்பு எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. (w15 3/15 பக். 12-16) “அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத் 25:13) இயேசுவின் உவமையை உங்களால் விளக்க முடியுமா?

  • மணமகன் (வசனம் 1)—இயேசு

  • புத்தியுள்ள, தயாராக இருந்த கன்னிப்பெண்கள் (வசனம் 2)—தங்கள் நியமிப்பை உண்மையோடு செய்யத் தயாராக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள். அவர்கள் முடிவுவரை ஒளிவீசிக்கொண்டு இருப்பார்கள் (பிலி 2:15)

  • “இதோ, மணமகன் வருகிறார்!” என்ற சத்தம் (வசனம் 6)—இயேசுவின் பிரசன்னத்திற்கான அத்தாட்சி

  • புத்தியில்லாத கன்னிப்பெண்கள் (வசனம் 8)—மணமகனை வரவேற்கப்போன, ஆனால் விழிப்போடும் உத்தமத்தன்மையோடும் இல்லாத பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்

  • எண்ணெயைத் தர மறுத்த புத்தியுள்ள கன்னிப்பெண்கள் (வசனம் 9)—கடைசி முத்திரையைப் பெற்றுக்கொண்ட உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களால், உண்மையில்லாமல் போன பரலோக நம்பிக்கையுள்ளவர்களுக்கு உதவ முடியாது; ஏனென்றால், அப்போது காலம் கடந்திருக்கும்

  • “மணமகன் வந்துவிட்டார்” (வசனம் 10)—இயேசு, மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் நியாயந்தீர்க்க வருகிறார்

  • புத்தியுள்ள கன்னிப்பெண்கள் மணமகனோடு திருமண விருந்தில் கலந்துகொள்ள வீட்டுக்குள் போவதும், கதவு மூடப்படுவதும் (வசனம் 10)—இயேசு, உண்மையுள்ள பரலோக நம்பிக்கையுள்ளவர்களை பரலோகத்துக்குக் கூட்டிச் சேர்க்கிறார்; உண்மையில்லாமல் போனவர்களோ, தங்களுடைய பரலோக வெகுமதியை இழக்கிறார்கள்

பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் நிறையப் பேர், உண்மையில்லாமல் போய்விடுவார்கள் என்றோ, அவர்களுக்குப் பதிலாக மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றோ இந்த உவமையில் சொல்லப்படவில்லை. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனென்றால், தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டுமா, அல்லது புத்தியில்லாமலும் உண்மையில்லாமலும் இருக்க வேண்டுமா என்பது அவர்கள் ஒவ்வொருவருடைய தீர்மானம். “நீங்களும் தயாராக இருங்கள்” என்று இயேசு அறிவுறுத்தினார். (மத் 24:44) நமக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும் சரி, உண்மையோடு சேவை செய்வதற்கு நம் இதயத்தைத் தயார்படுத்த வேண்டும் என்றும், விழிப்போடு இருப்பதற்குத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்றும் இயேசு எதிர்பார்க்கிறார்.

விழிப்போடு இருக்கிறேன் என்பதை நான் எப்படிக் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்