பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 8-9
என்னைப் பின்பற்றி வா–இதைச் செய்வதற்கு என்ன தேவை?
சால்கள் நேராக வரவேண்டுமென்றால், உழுபவருடைய கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்; பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அதேபோல், கிறிஸ்தவர்களும் இந்த உலகத்தில் தாங்கள் விட்டுவந்த காரியங்களைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் தங்கள் கவனத்தைச் சிதறவிடக் கூடாது.—பிலி 3:13.
கஷ்டங்களை அனுபவிக்கும்போது, நாம் கடந்து வந்த நாட்களை நினைத்து ஏங்கலாம். அதுவும், சத்தியத்துக்கு வருவதற்கு முன்பிருந்த நாட்களை நினைத்து நாம் ஏங்கலாம். அப்படி ஏங்கும்போது, கடந்த காலத்தில் நாம் பட்ட கஷ்டங்களை மறந்துவிட்டு, நாம் அனுபவித்த சந்தோஷங்களை மிகைப்படுத்திப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். எகிப்திலிருந்து கிளம்பிய இஸ்ரவேலர்களுடைய வாழ்க்கையிலும் இப்படித்தான் நடந்தது. (எண் 11:5, 6) விட்டுவந்த வாழ்க்கையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், அவர்களைப் போலவே நாமும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும், எதிர்காலத்தில் கடவுளுடைய அரசாங்கம் தரப்போகும் சந்தோஷங்களைப் பற்றியும் யோசிப்பது ரொம்பவே நல்லது.—2கொ 4:16-18.