கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்
சோதோமைவிட்டு தப்பித்து ஓடியபோது லோத்துவின் மனைவி ஏன் திரும்பிப் பார்த்தாள்? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. (ஆதி 19:17, 26) ஆனால், இயேசு கொடுத்த எச்சரிப்பிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்கிறோம். அதாவது, விட்டுவந்த விஷயங்களை நினைத்து அவள் ஏங்கியிருக்கலாம்! (லூ 17:31, 32) லோத்துவின் மனைவியைப் போல கடவுளுடைய தயவை இழந்துவிடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? பொருள்வசதிகள் நம் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பிடித்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (மத் 6:33) “ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத் 6:24) ஆனால், ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க முடியாதபடி பொருள்வசதிகளுக்கான ஆசை நம் கண்ணை மறைத்தால் என்ன செய்வது? பகுத்தறிவைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவும்படி அவரிடம் கேட்கலாம்; அப்படி மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையான தைரியத்தையும் பலத்தையும் தரும்படியும் அவரிடம் கேட்கலாம்.
லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள் என்ற மூன்று-பாக நாடகத்தைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
‘லோத்துவின் மனைவியை நினைத்துப் பார்க்கிறேன்’ என்பதை நான் எப்படிக் காட்டலாம்?
கைநிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை எப்படி குளோரியாவின் யோசனைகளை, பேச்சை, நடத்தையைப் பாதித்தது?
லோத்துவுடைய மனைவியின் உதாரணம் நமக்கு எப்படி ஒரு எச்சரிப்பாக இருக்கிறது?
பைபிள் நியமங்களின்படி செய்தது ஜோவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் எப்படி உதவியது?
வேலை செய்யும் இடத்தில் இருந்த ஆட்களோடு பழகியதால் ஆனா எப்படி ஆன்மீக ரீதியில் பாதிக்கப்பட்டாள்?
வாழ்க்கையில் பணத்துக்கு முதலிடம் கொடுக்கும்படி அழுத்தம் வரும்போது, நமக்கு ஏன் தைரியம் தேவைப்படுகிறது?
பிரயனும் குளோரியாவும் எப்படி மறுபடியும் ஆன்மீக விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள்?
என்னென்ன பைபிள் நியமங்களை இந்த வீடியோவிலிருந்து கற்றுக்கொண்டீர்கள்?