கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவா சொல்லிக்கொடுத்தபடி பிள்ளைகளை வளர்த்தோம்
பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க, தங்கள் பரலோகத் தந்தையாகிய யெகோவாவிடமிருந்து தம்பதிகள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா சொல்லிக்கொடுத்தபடி பிள்ளைகளை வளர்த்தோம் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, அபிலியோ மற்றும் உல்லா அமோரிம் தம்பதி பற்றிய இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
பிள்ளைகளாக இருந்தபோது அந்தத் தம்பதி எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தார்கள், தங்கள் பிள்ளைகளை வளர்க்க அவர்களுக்கு இது எப்படி உதவியது?
பிள்ளைப் பருவத்தைப் பற்றிய என்னென்ன அருமையான நினைவுகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கின்றன?
உபாகமம் 6:6, 7-ல் இருக்கிற அறிவுரையை அந்தத் தம்பதி எப்படிப் பின்பற்றினார்கள்?
என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை மட்டுமே அவர்கள் ஏன் சொல்லவில்லை?
நல்ல தீர்மானங்களை எடுக்க பிள்ளைகளுக்கு அவர்கள் எப்படி உதவினார்கள்?
முழுநேர சேவையைத் தேர்ந்தெடுக்க தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தியதில், அவர்கள் பங்கில் என்ன தியாகம் உட்பட்டிருந்தது? (bt பக். 178 பாரா 19)