கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வணக்கத்துக்காக கூடிவரும் இடங்களைப் பராமரிக்க நாம் எல்லாரும் என்ன செய்யலாம்?
நம்முடைய ராஜ்ய மன்றங்கள் வெறும் கட்டிடங்கள் கிடையாது; அவை யெகோவாவை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இடங்கள்! இவற்றைப் பராமரிப்பதில் நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கலந்துகொள்ளலாம்?
நம்முடைய ராஜ்ய மன்றங்களை நன்றாகப் பராமரிக்க என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லுங்கள்:
ராஜ்ய மன்றங்களை நாம் எதற்காகப் பயன்படுத்துகிறோம்?
ராஜ்ய மன்றத்தை நாம் ஏன் சுத்தமாக வைக்க வேண்டும், ஏன் நன்றாகப் பராமரிக்க வேண்டும்?
பராமரிப்பு வேலைகளில் கலந்துகொள்வதன் மூலம் நீங்கள் எப்படி நன்மையடைந்திருக்கிறீர்கள்?
பாதுகாப்பு ஏன் ரொம்ப முக்கியம், எந்தெந்த பாதுகாப்பு அம்சங்களை இந்த வீடியோவில் கவனித்தீர்கள்?
நம்முடைய நன்கொடைகள் மூலம் நாம் எப்படி யெகோவாவை மகிமைப்படுத்தலாம்?
நான் இந்த வேலையைச் செய்ய திட்டம் போட்டிருக்கிறேன்: