பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிலிப்பியர் 1-4
“எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”
ஜெபம்தான் கவலைக்கான மருந்து
நாம் விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், “எல்லா சிந்தனைக்கும் மேலான” சமாதானத்தை யெகோவா தருவார்
நம் பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடியாமல் போனாலும், அதைச் சகித்துக்கொள்ள யெகோவா உதவி செய்வார். நாம் எதிர்பார்க்காத விதத்தில்கூட அவர் நமக்கு உதவி செய்வார்.—1கொ 10:13