உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 ஜூன் பக். 7
  • பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • பொழுதுபோக்கு—கடவுளுக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • நீங்கள் தரமான பொழுதுபோக்கைக் கண்டடையலாம்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 ஜூன் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள்

நாம் ஏன் பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏனென்றால், சினிமா, பாடல், வெப்சைட், புத்தகம், வீடியோ கேம் என நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதிலுள்ள விஷயங்களால் நம் மனதை நிரப்ப முடிவு செய்கிறோம். நாம் நடந்துகொள்ளும் விதத்தையும் அவை பாதிக்கின்றன. வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்று பெரும்பாலான பொழுதுபோக்குகள் யெகோவா வெறுக்கும் காரியங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. (சங் 11:5; கலா 5:19-21) அதனால்தான், யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விஷயங்களையே தொடர்ந்து யோசித்துப் பார்க்கும்படி பைபிள் சொல்கிறது.—பிலி 4:8.

எப்படிப்பட்ட பொழுதுபோக்கை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ரோம சண்டைவீரர்களின் விளையாட்டு

    இன்று இருக்கும் சில பொழுதுபோக்குகள் எப்படிப் பழங்கால ரோமர்களின் வன்முறை விளையாட்டுகளைப் போல இருக்கின்றன?

  • சபையிலுள்ள இளம் சகோதரருடன் ஒரு பயனியர் சகோதரர் ஊழியம் செய்கிறார்

    பொழுதுபோக்கை ஞானமாகத் தேர்ந்தெடுப்பதற்குச் சபையில் உள்ளவர்கள் எப்படி இளம் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம்?

  • ஒரு போர்வீரன்

    ரோமர் 12:9-ன் அடிப்படையில் நாம் எப்படிப் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கலாம்?

  • இளம் யெகோவாவின் சாட்சிகள் ஃபுட்பால் விளையாடுகிறார்கள்

    உங்கள் பகுதியில் என்னென்ன நல்ல பொழுதுபோக்குகள் இருக்கின்றன?

பொழுதுபோக்கு—நேரடியாக ஈடுபடுகிறீர்களா, வெறுமனே ரசிக்கிறீர்களா?

இன்று பொழுதுபோக்கு என்றாலே பெரும்பாலும் மற்றவர்கள் செய்வதைத்தான் பார்த்து ரசிக்கிறோம் அல்லது மற்றவர்கள் எழுதியதைத்தான் வாசித்து ரசிக்கிறோம். சினிமாக்கள், புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவை மற்றவர்களுடைய படைப்புகளாகவே இருக்கின்றன. நாம் வெறுமனே ரசிக்கும் இப்படிப்பட்ட எல்லா பொழுதுபோக்குகளுமே மோசமானவை என்று சொல்ல முடியாதுதான்; ஆனாலும், நாமே நேரடியாக ஈடுபடும் பொழுதுபோக்குகளால் இன்னுமதிக நன்மைகள் கிடைக்கும். உதாரணத்துக்கு, சிலர் இசைக் கருவிகளை வாசிக்கிறார்கள் அல்லது படம் வரைகிறார்கள். இன்னும் சிலர், விளையாடுகிறார்கள், நீச்சலடிக்கிறார்கள், அல்லது மலை ஏறுகிறார்கள். நாம் எப்படிப்பட்ட பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுத்தாலும் சரி, “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே” செய்வோமாக!—1கொ 10:31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்