உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb19 அக்டோபர் பக். 7
  • கடவுளுடைய வார்த்தையை எந்தளவு மதிக்கிறீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய வார்த்தையை எந்தளவு மதிக்கிறீர்கள்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இதே தகவல்
  • பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்)
    வேறுசில தலைப்புகள்
  • உவில்லியம் டின்டேல்___தொலைநோக்கு ஆற்றலுள்ள ஒருவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • பைபிள் நம்மிடம் எவ்வாறு வந்தது—பகுதி இரண்டு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உதவி இருக்கிறது!
    விழித்தெழு!—2020
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
mwb19 அக்டோபர் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கடவுளுடைய வார்த்தையை எந்தளவு மதிக்கிறீர்கள்?

யெகோவா தேவனின் வார்த்தைகளும் எண்ணங்களும் பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பரிசுத்தமான இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அவர்தான். (2பே 1:20, 21) ஆட்சி செய்ய அவருக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பதை அவருடைய அரசாங்கம் நிரூபிக்கும் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் மூலமாக சீக்கிரத்தில் மனிதர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நம்முடைய பரலோகத் தகப்பனான யெகோவாவுக்கு இருக்கிற அருமையான குணங்களையும் பைபிள் நமக்குக் காட்டுகிறது.—சங் 86:15.

யெகோவாவின் வார்த்தை, விலைமதிப்புள்ள ஒரு பொக்கிஷம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக அதை மதிக்கிறோம். ஆனாலும், அதைத் தினமும் படித்து, அதன்படி நடப்பதன் மூலம் அதை மதிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோமா? “உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” என்று சங்கீதப் புத்தகத்தை எழுதிய ஒருவர் சொன்னார். (சங் 119:97) நாமும் அப்படித்தான் நினைக்கிறோம் என்பதை நம்முடைய செயல்கள் காட்ட வேண்டும்.

பைபிளை அவர்கள் மதித்தார்கள்—ஒரு பகுதி (வில்லியம் டின்டேல்) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • வில்லியம் டின்டேல்; வில்லியம் டின்டேல் தன்னுடைய அச்சகத்தில்; டின்டேலுடைய புதிய ஏற்பாட்டின் முதல் பதிப்பு

    வில்லியம் டின்டேல் ஏன் பைபிளின் சில பகுதிகளை மொழிபெயர்த்தார்?

  • பைபிளை மொழிபெயர்க்க அவர் எடுத்த முயற்சிகளை ஏன் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது?

  • டின்டேல் பைபிளின் பிரதிகள் எப்படி இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டன?

  • கடவுளுடைய வார்த்தையை மதிக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் காட்டலாம்?

தியானிப்பதற்கு: கடவுளுடைய வார்த்தை எப்படி . . .

  • விளக்காகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது?​—சங் 119:105

  • தண்ணீரைப் போல் இருக்கிறது?​—எபே 5:26

  • வாளைப் போல் இருக்கிறது?​—எபே 6:17

  • கண்ணாடியைப் போல் இருக்கிறது?​—யாக் 1:23-25

கடவுளுடைய வார்த்தையைத் தினமும் படியுங்கள்

பைபிள் வாசிப்புக்கான அட்டவணை

jw.org வெப்சைட்டில் இருக்கிற பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை பயன்படுத்தியிருக்கிறீர்களா? இந்த அட்டவணையின் PDF-ல் இருக்கிற வசனங்களை க்ளிக் செய்து, jw.org-ல் ஆன்லைன் பைபிளில் அந்தப் பகுதியை வாசிக்க முடியும். ஆடியோ பதிவுகள் உங்கள் மொழியில் இருந்தால், அவற்றையும் jw.org வெப்சைட்டில் பார்க்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்