பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 6-8
“அவர் அப்படியே செய்தார்”
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும், நவீன கருவிகளோ தொழில்நுட்பமோ இல்லாத காலத்தில் பேழையைக் கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பேழை மிகப் பெரியதாக இருந்தது—சுமார் 437 அடி (133 மீ) நீளம், 73 அடி (22 மீ) அகலம், 44 அடி (13 மீ) உயரம்
மரங்களை வெட்டவும், செதுக்கவும், இழுத்துக்கொண்டு வரவும் வேண்டியிருந்தது
அவ்வளவு பெரிய பேழையின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் தார் பூச வேண்டியிருந்தது
தங்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வருஷத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைக்க வேண்டியிருந்தது
பேழையைக் கட்டி முடிக்க 40-50 வருஷங்கள் ஆகியிருக்கும்
யெகோவா சொல்கிறபடி செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பதிவு நம்மை எப்படி உற்சாகப்படுத்தும்?