உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஏப்ரல் பக். 5
  • ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஆசீர்வாதத்தை ஊக்கமாக நாடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • ஊக்கந்தளராத முயற்சி எப்போது யெகோவா பலனளிக்கிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள போராடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஏப்ரல் பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 32-33

ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?

32:24-28

கடவுளுடைய அரசாங்கத்துக்குமுதலிடம் கொடுக்க நாம் கடினமாகப் போராட வேண்டும்; அப்படிச் செய்தால் யெகோவாவின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். (1கொ 9:26, 27) தேவதூதரோடு போராடும்போது யாக்கோபு என்ன மனப்பான்மையை காட்டினாரோ அதே மனப்பான்மையை யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நாம் காட்டவேண்டும். யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக கடினமாகப் போராடுவதைநாம் எப்படிக் காட்டலாம்?

  • சபைக் கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரிப்பதன் மூலம்

  • ஊழியத்துக்குத் தவறாமல் போவதன் மூலம்

  • சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதன் மூலம்

படங்களின் தொகுப்பு: பிஸியாக இருக்கும் ஓர் இளம் தாய். 1. நாளின் ஆரம்பத்தில் அவள் ஜெபம் செய்கிறாள். 2. ஊழியத்துக்குப் போவதற்குமுன் தன் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டுகிறாள். 3. தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளோடும் சபையிலிருக்கும் சகோதரிகளோடும் சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்கிறாள்.

நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, யெகோவாவிடம் உதவி கேட்டு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்; அவரைச் சேவிப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்க சொல்லி கேளுங்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு வாழ்க்கையின் என்னென்ன அம்சங்களில் நான் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்