உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஏப்ரல் பக். 8
  • எனக்கு எது ரொம்ப முக்கியம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எனக்கு எது ரொம்ப முக்கியம்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ஊக்கந்தளராத முயற்சி எப்போது யெகோவா பலனளிக்கிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • என் லட்சியங்களை அடைவது எப்படி?
    விழித்தெழு!—2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஏப்ரல் பக். 8
மனித உருவில் இருக்கும் ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

எனக்கு எது ரொம்ப முக்கியம்?

ரொம்ப முக்கியமான விஷயத்துக்காக ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடினார். அது என்ன? யெகோவாவிடமிருந்து கிடைக்கும் ஆசீர்வாதம். (ஆதி 32:24-31; ஓசி 12:3, 4) யாக்கோபு மாதிரியே யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்காகவும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் கடினமாக முயற்சி செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? உதாரணத்துக்கு, கூட்டத்துக்கு போவதா அல்லது இன்னும் கொஞ்ச நேரம் வேலை பார்ப்பதா என்ற சூழ்நிலையில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நம்முடைய நேரம், சக்தி, வளங்கள் இவை எல்லாவற்றிலும் மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது, “போதும் போதும் என்கிற அளவுக்கு” ஆசீர்வாதங்களை அவர் நம்மேல் பொழிவார். (மல் 3:10, அடிக்குறிப்பு.) அவர் நம்மை வழிநடத்துவார், பாதுகாப்பார், நம்முடைய தேவைகளைப் பார்த்துக்கொள்வார்.—மத் 6:33; எபி 13:5.

ஆன்மீக குறிக்கோள்களை வைத்து அதில் நிலைத்திருங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஒரு பயனியர் சகோதரி சைகை மொழி மொழிப்பெயர்ப்பாளராக கம்பெனியில் வேலை செய்கிறாள்.

    அந்தச் சகோதரிக்குப் பிடித்த விஷயமே எப்படி அவருக்குச் சோதனையாக மாறியது?

  • அதே பயனியர் சகோதரி இரவில், அதுவும் அலுவலகமே இருட்டான பிறகும், வேலை செய்கிறாள்.

    நம்முடைய வேலை நமக்கு எப்படி ஒரு சோதனையாக ஆகிவிடலாம்?

  • தீமோத்தேயு, இரவில் ஜன்னல் பக்கத்தில் நின்றுகொண்டு சுருளை வாசிக்கிறார்.

    முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக ஆன பிறகுகூட, தீமோத்தேயு ஏன் குறிக்கோள்களை வைக்க வேண்டியிருந்தது?—1தீ 4:16

  • பைபிள் படிப்பு எடுக்க மாணாக்கரின் வீட்டுக்குப் போகும்போது அந்தப் பயனியர் சகோதரியும் இன்னொரு சகோதரியும் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.

    வாழ்க்கையில் உங்களுக்கு எது ரொம்ப முக்கியம்?

    நம்முடைய “முக்கியமான வேலை” எது என்று எப்படிக் காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்