கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முழு தகவலையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்
பைபிள் பதிவுகளை வாசிக்கும்போது அதன் முழு தகவலையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு பதிவைப் படிக்கும்போது அதன் சூழமைவு என்ன, அங்கு யாரெல்லாம் இருந்தார்கள், ஒரு விஷயத்தை ஏன் செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்திக் காட்சிகளைப் பாருங்கள், சத்தங்களைக் கேளுங்கள், வாசனைகளை முகருங்கள், அந்த நபர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பைபிள் வாசிப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
யோசேப்புக்கும் அவருடைய அண்ணன்களுக்கும் இடையிலிருந்த உரசல்களுக்கு என்ன காரணங்கள் இருந்திருக்கலாம்?
யோசேப்பின் அண்ணன்கள் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டதற்கு எவையெல்லாம் காரணமாக இருந்திருக்கலாம்?
யோசேப்பின் அப்பாவான யாக்கோபைப் பற்றி வசனங்களிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
விரிசல்களைச் சரிசெய்யும் விஷயத்தில் யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு என்ன அருமையான முன்மாதிரி வைத்தார்?
பைபிளை எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?