பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 44-45
யோசேப்பு தன் அண்ணன்களை மன்னிக்கிறார்
யாராவது நம்மைப் புண்படுத்தினால் அவர்களை மன்னிப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுவும், அவர்கள் வேண்டுமென்றே அதைச் செய்திருந்தால் மன்னிப்பது ரொம்பவே கஷ்டம். தன்னை மோசமாக நடத்திய தன் அண்ணன்களை மன்னிக்க யோசேப்புக்கு எது உதவியது?
யோசேப்பு, பழிவாங்க துடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களை மன்னிக்க விரும்பியதால், அவர்கள் மனம்மாறி விட்டார்களா என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.—சங் 86:5; லூ 17:3, 4
மனதில் வன்மத்தை வளர்ப்பதற்குப் பதிலாக, தாராளமாக மன்னிக்கும் யெகோவாவைப் போலவே நடந்துகொண்டார்.—மீ 7:18, 19
தாராளமாக மன்னிக்கும் யெகோவாவை நான் எப்படிப் பின்பற்றலாம்?