பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 8-9
பெருமைபிடித்த பார்வோன் தனக்கே தெரியாமல் கடவுளுடைய நோக்கம் நிறைவேற உதவுகிறான்
எகிப்திய பார்வோன்கள் தங்களை கடவுள்களாக நினைத்தார்கள். அதனால்தான், பார்வோன் திமிராக நடந்துகொண்டான். மோசேயும் ஆரோனும் சொன்னதை அவன் காதில் வாங்கவே இல்லை, ஏன், தன்னுடைய மந்திரவாதிகள் சொன்னதையும்கூட அவன் கேட்கவில்லை.
மற்றவர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லும்போது அதைக் காதுகொடுத்து கேட்கிறீர்களா? உங்களுக்கு ஒருவர் ஆலோசனை கொடுக்கும்போது அதை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது, நீங்கள் செய்வதுதான் சரி என்பதுபோல் நடந்துகொள்கிறீர்களா? “அகம்பாவம் வந்தால் அழிவு வரும்” என்பதை மறந்துவிடாதீர்கள். (நீதி 16:18) அகம்பாவத்தை விரட்டியடிப்பது எவ்வளவு முக்கியம்!