பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 10-11
மோசேயும் ஆரோனும் அசாதாரண தைரியத்தைக் காட்டுகிறார்கள்
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் பேசியபோது அசாதாரண தைரியத்தைக் காட்டினார்கள். பார்வோன் அந்தச் சமயத்தில் உலகத்திலேயே அதிக அதிகாரம் படைத்தவனாக இருந்தவன். அப்படியிருந்தும், மோசேயும் ஆரோனும் எப்படித் தைரியத்தைக் காட்டினார்கள்? மோசேயைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “விசுவாசத்தால்தான் அவர், ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனார்; பார்க்க முடியாதவரைப் பார்ப்பதுபோல் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார்.” (எபி 11:27) மோசேவுக்கும் ஆரோனுக்கும் யெகோவாமீது அசைக்கமுடியாத விசுவாசம் இருந்தது; அவரை அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச எந்தெந்த சூழ்நிலைமைகளில் தைரியம் தேவைப்படும்?