உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 அக்டோபர் பக். 5
  • இளைஞர்களே, யெகோவா உங்களுடைய உயிர் நண்பரா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இளைஞர்களே, யெகோவா உங்களுடைய உயிர் நண்பரா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?
    விழித்தெழு!—2009
  • என் ஆருயிர் நண்பர் ஏன் பிரிந்துசென்றார்?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 அக்டோபர் பக். 5
ஒரு இளைஞர் தனிப்பட்ட படிப்பில் மூழ்கியிருக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இளைஞர்களே, யெகோவா உங்களுடைய உயிர் நண்பரா?

உங்கள் நண்பரிடம் என்னென்ன குணங்களை எதிர்பார்ப்பீர்கள்? ஒருவேளை, அவர் உண்மையானவராக, அன்பானவராக, தாராள குணமுள்ளவராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள். இந்த எல்லா குணங்களையும் யெகோவா காட்டுகிறார்! (யாத் 34:6; அப் 14:17) நீங்கள் செய்யும் ஜெபத்தை அவர் கவனித்துக்கேட்கிறார். உங்களுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார். (சங் 18:19, 35) நீங்கள் தவறு செய்யும்போது மன்னிக்கிறார். (1யோ 1:9) யெகோவாவைப் போல ஒரு அருமையான நண்பர் இருக்க முடியுமா?

யெகோவாவுடைய நண்பராக ஆவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளைப் படித்து அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அவரிடம் மனம்திறந்து பேசுங்கள். (சங் 62:8; 142:2) யெகோவா எதையெல்லாம் முக்கியமானதாக நினைக்கிறாரோ அதையெல்லாம் நீங்களும் முக்கியமானதாக நினையுங்கள். உதாரணத்துக்கு, அவருடைய மகனை, அவருடைய அரசாங்கத்தை, எதிர்காலத்தை பற்றிய வாக்குறுதிகளை உயர்வாக நினையுங்கள். அவரைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள். (உபா 32:3) யெகோவாவோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்ளும்போது, அவர் என்றென்றைக்கும் உங்களுடைய நண்பராக இருப்பார்.—சங் 73:25, 26, 28.

இளைஞர்கள்—“யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  •  ‘இளைஞர்கள்​​—⁠யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. தனிப்பட்ட படிப்பை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு சகோதரி ஜெபம் செய்கிறார்.

    யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

  • ‘இளைஞர்கள்​​—⁠யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஒரு நபருக்கு பயனியர் சகோதரர் ஒருவர், கேரன் (ஸிகாவ்) மொழி பைபிளிலிருந்து வசனத்தைக் காட்டுகிறார்.

    யெகோவாவை வணங்க சபையில் இருக்கிற மற்றவர்கள் உங்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்?

  • ‘இளைஞர்கள்​—⁠யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. வயதானவர்களின் உதவியை ஏற்றுக்கொள்கிற ஒரு இளம் சகோதரர், வயதான சகோதரர் ஒருவரோடு ஊழியத்துக்குப் போகிறார்.

    ஊழியத்தில் ஈடுபடுவது, யெகோவாவோடு இருக்கிற நட்பைப் பலப்படுத்திக்கொள்ள எப்படி உதவும்?

  • ‘இளைஞர்கள்​​—⁠யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஒரு சகோதரி தன்னுடைய வீட்டிலிருந்து இரண்டு மணிநேரம் நடந்துபோய் காதுகேட்காத ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு எடுக்கிறார்.

    யெகோவாவோடு வைத்திருக்கும் நட்புதான் நிலையானது!

    யெகோவாவுக்கு எந்தெந்த விதங்களில் நீங்கள் சேவை செய்யலாம்?

  • யெகோவாவிடம் நீங்கள் ருசித்துப்பார்த்த விஷயம் என்ன?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்