உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 11
  • யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • ஞானஸ்நானம்​—⁠சிறந்த லட்சியம்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெறுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 11
வளைந்து நெளிந்து செல்லும் வழி, யெகோவாவை வணங்குபவராக ஆவதற்கான முன்னேற்றப் பாதையைச் சித்தரிக்கிறது. அந்த வழியில் வைக்கப்பட்டிருக்கிற பலகைகள், பைபிள் படிப்பு, கூட்டங்களில் கலந்துகொள்வது, ஊழியத்தில் ஈடுபடுவது, ஞானஸ்நானம் போன்ற படிகளைக் குறிக்கின்றன.

ஞானஸ்நானத்துக்கான பாதையில் எதுவரைக்கும் போயிருக்கிறீர்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

யெகோவாவை வணங்க முடிவு செய்யுங்கள்

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக அல்லது பைபிள் மாணவராக இருந்தால், ஞானஸ்நானம் எடுக்க இலக்கு வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்? யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் அவரோடு ஒரு விசேஷ பந்தத்துக்குள் வர உங்களுக்கு உதவுகின்றன. (சங் 91:1) மீட்பு பெறுவதற்கான வழியாகவும் இருக்கின்றன. (1பே 3:21) இந்தப் படிகளை எடுக்கும் அளவுக்கு எப்படி முன்னேறலாம்?

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனதில் ஏதாவது கேள்விகள் இருந்தால், நீங்களே ஆராய்ச்சி செய்து பதில்களைக் கண்டுபிடியுங்கள். (ரோ 12:2) என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பாருங்கள். யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்த மாற்றங்களைச் செய்யுங்கள். (நீதி 27:11; எபே 4:23, 24) உதவிக்காக எப்போதும் அவரிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவா தன்னுடைய சக்தியால் உங்களைப் பலப்படுத்தி ஆதரிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். (1பே 5:10, 11) நீங்கள் எடுக்கிற முயற்சி வீண்போகாது. யெகோவாவை வணங்கும்போது உங்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கை கிடைக்கும்.—சங் 16:11.

ஞானஸ்நானம் எடுக்க சில டிப்ஸ் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ஞானஸ்நானம் எடுக்க சிலர் என்னென்ன தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது?

  • யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்கும் அளவுக்கு விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தகுதிபெற சிலரை எது தூண்டியிருக்கிறது?

  • யெகோவாவை வணங்க முடிவு செய்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

  • அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் எதைக் குறிக்கிறது?

ஞானஸ்நானப் பேச்சின் முடிவில், ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களிடம் பேச்சாளர் எழுந்து நிற்கும்படியும் இந்த இரண்டு கேள்விகளுக்கு சத்தமாகப் பதில் சொல்லும்படியும் கேட்டுக்கொள்வார்:

நீங்கள் உங்கள் பாவங்களை விட்டு மனம் திருந்தி, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து, மீட்புக்காக இயேசு கிறிஸ்து மூலம் அவர் செய்திருக்கிற ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகவும் அவருடைய அமைப்பில் ஒருவராகவும் ஆகிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறீர்களா?

ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்கள் உறுதியாகவும் தெளிவாகவும் சொல்லும் பதில்கள், மீட்புவிலையில் அவர்கள் விசுவாசம் வைத்திருப்பதையும் தங்களை யெகோவாவுக்கு முழுமையாக அர்ப்பணித்திருப்பதையும் எல்லாருக்கும் முன்பாக ‘வாயினால் அறிவிப்பதை’ காட்டுகின்றன.—ரோ 10:9, 10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்