உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மே பக். 13
  • குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு வழி
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மே பக். 13
சபைக் கூட்டத்தில் ஒரு குடும்பத்தார் ஒன்றுசேர்ந்து பாடுகிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்

குடும்பத்தாரை ஒன்றிணைக்கிற பசைதான் அன்பு! குடும்பத்தில் அன்பு இல்லையென்றால், ஒற்றுமையாக இருப்பதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும் கஷ்டமாகிவிடும். ஒரு கணவராக, மனைவியாக, பெற்றோராக குடும்பத்தில் நீங்கள் எப்படி அன்பு காட்டலாம்?

அன்பான கணவன், தன்னுடைய மனைவியின் தேவைகளையும், கருத்துகளையும், உணர்ச்சிகளையும் புரிந்துகொள்வார். (எபே 5:28, 29) குடும்பத்தாருடைய அன்றாடத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார். யெகோவாவோடு அவர்கள் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார். தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவதும் அதில் ஒன்று. (1தீ 5:8) அன்பான மனைவி, தன்னுடைய கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாள், அவருக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்டுவாள். (எபே 5:22, 33; 1பே 3:1-6) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிக்க மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (எபே 4:32) அன்பான பெற்றோர்கள், பிள்ளைகள் ஒவ்வொருவர்மீதும் அக்கறை காட்டுவார்கள், யெகோவாமேல் அன்பு காட்ட அவர்களுக்கு சொல்லித்தருவார்கள். (உபா 6:6, 7; எபே 6:4) ‘ஸ்கூலில் பிள்ளைகளுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன? கூடப்படிக்கிற பிள்ளைகளிடமிருந்து வருகிற தொல்லைகளை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?’ என்பதையெல்லாம் அக்கறையுள்ள பெற்றோர் கவனிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்போது எல்லாருமே பாதுகாப்பாக உணருவார்கள்.

ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு ஒரு கணவனும் மனைவியும் ஒரு பைபிள் வசனத்தைக் கலந்துபேசுகிறார்கள்.

    அன்பான ஒரு கணவன் தன்னுடைய மனைவியை எப்படிக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிக்கிறார்?

  • ‘ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, ஒரு சகோதரி யெகோவாவின் சாட்சியாக இல்லாத தன் கணவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கிறார்; அவரை சமாதானப்படுத்துகிறார்.

    அன்பான ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு எப்படி ஆழ்ந்த மரியாதை காட்டுகிறாள்?

  • ‘ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் ஒரு குடும்பத்தார் கூட்டத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள்.

    அன்பான பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய வார்த்தையை எப்படிப் பதிய வைக்கிறார்கள்?

எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்

குடும்பத்தாரோடு அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்காக செலவிடும் நேரத்தையெல்லாம் மொபைல் ஃபோன்களும் டேப்லெட்டுகளும் சுலபமாக உறிஞ்சிவிடும். இந்தச் சாதனங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதில் தங்களுக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி கட்டுப்பாடுகள் வைப்பதைப் பற்றி பெற்றோர் யோசித்துப்பார்க்கலாம். அதோடு, இளம் பிள்ளைகள் ஆன்லைனில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளலாமா வேண்டாமா, அப்படிச் செய்வதாக இருந்தால் யாரோடு தொடர்புகொள்ளலாம் என்பதையெல்லாம் பெற்றோர் தீர்மானிக்க வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்