உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 9
  • உங்கள் ஆன்லைன் நண்பர்கள் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ஆன்லைன் நண்பர்கள் யார்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • சோஷியல் நெட்வொர்க்—படுகுழியில் விழுந்துவிடாதீர்கள்!
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்? பகுதி 2
    விழித்தெழு!—2012
  • ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோருடைய கவனத்திற்கு
    விழித்தெழு!—2009
  • சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 9

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

உங்கள் ஆன்லைன் நண்பர்கள் யார்?

பாசத்தாலும் மரியாதையாலும் பின்னிப்பிணைந்து இருப்பவர்களைத்தான் நண்பர்கள் என்று சொல்கிறோம். யோனத்தானும் தாவீதும் இப்படிப்பட்ட நட்புக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கோலியாத்தை தாவீது கொலை செய்ததற்குப் பிறகுதான் அவர்களுக்கு இடையில் நெருக்கமான நட்பு உருவானது. (1சா 18:1) அவர்கள் நண்பர்களாக ஆனதற்குக் காரணம், அவர்களிடம் இருந்த நல்ல குணங்கள்தான். அப்படியென்றால், ஒருவரோடு நெருக்கமான நட்பை வைத்துக்கொள்வதற்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதற்கு நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், சோஷியல் நெட்வொர்க்கைப் பொறுத்தவரைக்கும் ஒரு பட்டனைத் தட்டினாலே போதும், “நண்பர்கள்” என்ற பெயரில் ஏகப்பட்ட பேர் வந்து குவிந்துவிடுவார்கள். இவர்களெல்லாம் தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மறைத்துவிட்டு, நம்மிடம் நல்லவர்கள்போல் வேஷம் போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், யாரை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ‘நண்பனாக இருக்க ஆசைப்படுகிறேன்’ (friend request) என்ற அழைப்பைக் கொடுக்கிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த எல்லா விஷயங்களையும் கூட்டிக்கழித்துப் பார்த்த பிறகு, சோஷியல் நெட்வொர்க்கையே பயன்படுத்த வேண்டாம் என்று நிறைய பேர் முடிவெடுத்திருக்கிறார்கள். ஒருவேளை, அதைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வேறு என்ன சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • “சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா?” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி: தன்னுடைய ஃபோட்டோக்கள் டிவியில் காட்டப்படுவதைப் பார்த்து ஒரு பெண் அதிர்ச்சி அடைகிறாள்.

    உங்களுடைய படங்களையும் கருத்துகளையும் சோஷியல் நெட்வொர்க்கில் போடுவதற்கு முன் நீங்கள் எதையெல்லாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

  • “சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா?” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி: தராசின் ஒரு தட்டில் ஒரு பெண்ணின் அழகான ஃபோட்டோவும் இன்னொரு தட்டில் குவித்து வைக்கப்பட்ட காசுகளும் இருக்கின்றன. ஃபோட்டோவின் எடை காசுகளின் எடையைவிட அதிகமாக இருக்கிறது.

    ஆன்லைன் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

  • “சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா?” என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி: சோஷியல் மீடியாவில் போடப்பட்டிருக்கிற ஒரு போஸ்ட்டை இரண்டு முரடர்கள் ஒரு பையனுக்குக் காட்டும்போது அவன் தன்னுடைய கண்களைக் கையால் மூடிக்கொள்கிறான்.

    சோஷியல் நெட்வொர்க்கை ‘இவ்வளவு நேரம்தான் பயன்படுத்துவேன்’ என்று ஒரு வரம்பு வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?—எபே 5:15, 16

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்