உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w21 நவம்பர் பக். 31
  • உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்குத் தெரியுமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • இதே தகவல்
  • பைபிள் புத்தக எண் 34—நாகூம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • பைபிள் திறனாய்வாளர்களைக் குழப்பமடையச் செய்த ஒரு மறைந்த பேரரசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • நாகூம் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • நாகூம் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
w21 நவம்பர் பக். 31
பண்டைய நினிவேயின் கட்டிடங்களையும் நினைவுச் சின்னங்களையும் பற்றி ஒரு ஓவியனின் கற்பனை.

பிரம்மாண்டமான கட்டிடங்களோடும் நினைவுச் சின்னங்களோடும் காட்சியளித்த நினிவே நகரம்

உங்களுக்குத் தெரியுமா?

யோனாவின் காலத்துக்குப் பிறகு நினிவேக்கு என்ன நடந்தது?

கிட்டத்தட்ட கி.மு. 670-ல், உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக அசீரியா ஆனது. “அதன் எல்லை மேற்கில் சைப்ரஸ்முதல் கிழக்கில் ஈரான்வரை இருந்தது” என்றும் “ஒரு கட்டத்தில் எகிப்தும் அந்த சாம்ராஜ்யத்தின் ஒரு பாகமாக இருந்தது” என்றும் பிரிட்டிஷ் மியூஸியத்தின் ஒரு வெப்சைட் சொல்கிறது. அசீரியாவின் தலைநகரமாக இருந்த நினிவே உலகத்திலேயே மிகப்பெரிய நகரமாக இருந்தது. அந்த நகரத்தில் பிரமாண்டமான நினைவுச் சின்னங்களும், அழகான தோட்டங்களும், ஆடம்பரமான அரண்மனைகளும், பெரிய பெரிய நூலகங்களும் இருந்தன. அசீரியாவின் மற்ற ராஜாக்களைப் போலவே, அசீரிய ராஜாவாக இருந்த அசூர்பானிபாலும் தன்னை “இந்த உலகத்துக்கே ராஜா” என்று அழைத்துக்கொண்டதாக பழங்கால நினிவே நகர சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் காட்டுகின்றன. அவருடைய ஆட்சிக் காலத்தில் அசீரியாவையும் நினிவேயையும் யாராலும் அசைக்க முடியாது என்ற அபிப்பிராயம் இருந்தது.

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் உள்ள அசீரியப் பேரரசின் எல்லையைக் காட்டும் வரைபடம். வரைபடம் காட்டும் இடங்கள், எகிப்து, சைப்ரஸ் தீவு, நினிவே

அந்தக் காலத்தில் உலகத்திலேயே பெரிய வல்லரசாக இருந்த அசீரியா சாம்ராஜ்யம்

ஆனால், அசீரியா கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த அந்தச் சமயத்திலேயே யெகோவாவின் தீர்க்கதரிசியான செப்பனியா இப்படிச் சொன்னார்: ‘[யெகோவா] அசீரியாவை . . . அழிப்பார். நினிவேயைப் பாழாக்கி அதைப் பாலைவனம் போலாக்குவார்.’ அது மட்டுமல்ல, நாகூம் தீர்க்கதரிசியும், ‘வெள்ளியைச் சூறையாடுங்கள், தங்கத்தைக் கைப்பற்றுங்கள்! நகரம் வெறுமையாக்கப்பட்டது, பாழாக்கப்பட்டது, நாசமாக்கப்பட்டது! . . . உன்னைப் பார்க்கிற எல்லாரும், “நினிவே அழிந்துவிட்டது!” . . . என்று சொல்லி ஓடிப்போவார்கள்’ என்று தீர்க்கதரிசனம் சொன்னார். (செப். 2:13; நாகூ. 2:9, 10; 3:7) இந்தத் தீர்க்கதரிசனங்களைக் கேட்டபோது, ‘இதெல்லாம் நடக்கிற கதையா? பலமான இந்த அசீரிய சாம்ராஜ்யத்த யார்னாலயாவது தோற்கடிக்க முடியுமா?’ என்று மக்கள் யோசித்திருக்கலாம். இவையெல்லாம் நம்ப முடியாத விஷயமாக அவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

பாழாக்கப்பட்ட நினிவே நகரம்!

ஆனால், அதுதான் நடந்தது! கி. மு. 600-க்கு கொஞ்சம் முன்பு, பாபிலோனியர்களும் மேதியர்களும் அசீரியாவை வீழ்த்தினார்கள். கடைசியில் அது பாழடைந்த இடமாக ஆகிவிட்டது. அப்படியொரு நகரம் இருந்தது என்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்! கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, “அது மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது. நினிவே என்று ஒரு நகரம் இருந்தது என்பதை பைபிளிலிருந்துதான் மக்கள் தெரிந்துகொண்டார்கள்” என்று நியு யார்க்கில் இருக்கிற மெட்ரோபொலிட்டன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் வெளியிட்ட ஒரு பிரசுரம் சொல்கிறது. “அசீரியா சாம்ராஜ்யத்தின் தலைநகரம் உண்மையிலேயே இருந்ததா என்றுகூட மக்களுக்குத் தெரியவில்லை” என்று பிப்ளிகல் ஆர்க்கியலாஜிக்கல் சொஸைட்டி சொல்கிறது. ஆனால், 1845-ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆஸ்டன் ஹென்றி லேயார்ட், நினிவேயின் இடிபாடுகளைத் தோண்டினார். அந்த ஆராய்ச்சியில் நினிவே என்ற ஒரு புகழ்பெற்ற நகரம் இருந்தது தெரியவந்தது.

நினிவேயைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறியதைப் பார்க்கும்போது, இன்றைக்கு இருக்கிற அரசாங்கங்களைப் பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனங்களும் அப்படியே நிறைவேறும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—தானி. 2:44; வெளி. 19:15, 19-21.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்