உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp23 எண் 1 பக். 10-11
  • 3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதன் அர்த்தம் என்ன
  • பைபிளில் சொல்லப்பட்ட நபர்களை பற்றி படிப்பது எப்படி உதவும்?
  • 2 | பைபிள் தரும் “ஆறுதல்”
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • 4 | பைபிள் தரும் நல்ல ஆலோசனைகள்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • 1 | கடவுளிடம் பேசுங்கள்​—“உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்”
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • “பாதுகாப்பில்லை” என்று பயமா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
wp23 எண் 1 பக். 10-11
மோசே தீர்க்கதரிசி வேதனையில் வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டுகிறார்.

3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்

பைபிள் சொல்கிறது: கடவுள் பக்தியுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் “நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் . . . இருந்தன.”—யாக்கோபு 5:17.

இதன் அர்த்தம் என்ன

நிறைய ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களுக்கு வித்தியாசப்பட்ட உணர்ச்​சிகள் இருந்தன. அவர்களை பற்றி படிக்கும்போது, ‘அட, இவர்களும் என்னை மாதிரியே யோசித்திருக்கிறார்களே!’ என்று உங்களுக்கு தோன்றலாம்.

பைபிளில் சொல்லப்பட்ட நபர்களை பற்றி படிப்பது எப்படி உதவும்?

மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை! மனநோயால் அவதிப்படுகிறவர்களுக்கு இந்த ஆசை அதிகமாகவே இருக்கும். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் சில நபர்களை பற்றி படிக்கும்போது, நமக்கு இருக்கும் அதே உணர்​வுகள் அவர்களுக்கும் இருந்ததை நம்மால் பார்க்க முடியும். இவர்களை பற்றி தெரிந்துகொள்வதால், நம்மை போலவே மனப்பதற்றத்தாலும் வேதனையான உணர்​வுகளாலும் கஷ்டப்பட்ட நிறைய பேர் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வோம்.

  •  ‘உதவிக்கு யாருமே இல்லை,’ ‘நிர்க்கதியாக நிற்கிறேன்’ என்றெல்லாம் நிறைய பேர் உணர்ந்திருப்பதாக பைபிள் காட்டுகிறது. ‘இதற்குமேல் என்னால் கொஞ்சம்கூட முடியாது!’ என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படித்தான் மோசேக்கும் எலியாவுக்கும் தாவீதுக்கும் தோன்றியது.​—எண்ணாகமம் 11:14; 1 ராஜாக்கள் 19:4; சங்கீதம் 55:4.

  •  அன்னாள் என்ற ஒரு பெண்ணை பற்றி பைபிள் சொல்கிறது. அவளுக்கு குழந்தை இல்லை! அந்த கஷ்டம் போதாதென்று, அவளுடைய கணவரின் இன்னொரு மனைவி, மனதை குத்தி கிழிக்கும் வார்த்தைகளால் அவளை பழித்து பேசிக்கொண்டே இருந்தாள். இதனால், அன்னாள் ரொம்பவே “மனமுடைந்துபோயிருந்தாள்.”​—1 சாமுவேல் 1:​6, 10.

  •  பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் யோபு என்ற நபருக்கு, தாங்க முடியாத சோகத்தை நெஞ்சில் சுமக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. கடவுள்பக்தியுள்ள ஒரு மனிதராக இருந்தாலும், வேதனையில் இப்படி புலம்பினார்: “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது; உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை.”​—யோபு 7:16.

இவர்களெல்லாம் தங்களுக்குள் இருந்த சோகத்தை எப்படி சமாளித்தார்கள்... யோசிக்கும் விதத்தை எப்படி மாற்றினார்கள்... என்று தெரிந்துகொண்டால், நமக்கு இருக்கும் மனநோயை சமாளிக்க தெம்பு கிடைக்கும்.

பைபிள் எப்படி உதவுகிறது கெவின் சொல்கிறார்...

என்னுடைய பிரச்சினை

மோசே தீர்க்கதரிசி வேதனையில் வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டுகிறார்.

“எனக்கு கிட்டத்தட்ட 50 வயது ஆனபோது பைபோலார் டிஸ்ஆர்டர் இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். வாழ்க்கையில் என்ன வந்தாலும் ஒருகை பார்த்துவிடலாம் என்று ஒரு நேரம் தோன்றும். ஆனால், வேறு சமயங்களில் ‘எதற்காகத்தான் வாழ்கிறோமோ! பேசாமல் செத்துவிடலாம்!!’ என்று தோன்றும்.”

பைபிள் எனக்கு எப்படி உதவி செய்கிறது

“பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற பேதுருவை போல் நான் இருப்பதாக எனக்கு தோன்றும். அவர் சில தவறுகளை செய்தார். அதனால், ஒன்றுக்கும் உதவாதவன் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஆனால், அந்த எண்ணத்தில் அவர் கூனிக்குறுகிப்போகவில்லை. தன்னுடைய நண்பர்களோடு நிறைய நேரம் செலவு செய்தார். நான் அவதிப்படுகிற சில நாட்களில், என் குறைகள் என் கண்முன் மலை மாதிரி நிற்கும். நான் ஒன்றுக்குமே லாயக்கில்லை என்று தோன்றும். அப்போது, பேதுருவை போலவே, நண்பர்களை தேடி போவேன். அப்படி செய்வது, வாழ்க்கையில் உடைந்துபோய்விடாமல் தொடர்ந்து முன்னோக்கி போக உதவுகிறது.

தாவீது ராஜாவைப் பற்றி படிப்பதும் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. அவரும் தன் சூழ்நிலையை நினைத்து கலங்கிப்போனார். செய்த தவறுகளை நினைத்து உடைந்துபோனார். சிலசமயங்களில், நானும் எதையாவது யோசிக்காமல் பேசிவிடுவேன், செய்துவிடுவேன்; பிறகு, நொந்துகொள்வேன். அப்போதெல்லாம், சங்கீதம் 51-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகள் எனக்கு இதமாக இருக்கும். 3-வது வசனத்தில் தாவீது சொல்கிறார்: “என் குற்றங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். என் பாவம் எப்போதும் என் கண் முன்னால் இருக்கிறது.” மனஅழுத்தம் என்னைப்போட்டு அழுத்தும்போது எனக்கும் இப்படித்தான் இருக்கும். என்னை பற்றி நல்லபடியாக யோசிக்கவே முடியாது. 10-வது வசனத்தில் இருக்கிற வார்த்தைகளை நான் யோசிப்பேன்: “கடவுளே, சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள். அலைபாயாத புதிய மனதை எனக்குள் வையுங்கள்.” நானும் இப்படித்தான் வேண்டிக்கொள்வேன். 17-வது வசனத்தின் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் தரும்: “கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்.” கடவுளுக்கு என்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இது தருகிறது.

இந்த நபர்களை பற்றி யோசிப்பதும், கடவுள் இன்றைக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசிப்பதும், எதிர்காலம் வசந்த காலமாக இருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது. சில விஷயங்களை செய்யப்​போவதாக கடவுள் சத்தியம் பண்ணியிருக்கிறார். அவை கண்டிப்பாக நடக்கும் என்ற நம்புகிறேன். இந்த நம்பிக்கையால், இப்போது நன்றாக இருக்கிறேன்.”

இன்னும் உதவி வேண்டுமா?

ஜனவரி 2015 விழித்தெழு! பத்திரிகையில் “மனநோய் பற்றிய உண்மைகள்” என்ற கட்டுரையை பாருங்கள். இது jw.org வெப்சைட்டில் கிடைக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்