உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மார்ச் பக். 32
  • பைபிள் என்ற கண்ணாடியை நன்றாகப் பயன்படுத்துங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் என்ற கண்ணாடியை நன்றாகப் பயன்படுத்துங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • இதே தகவல்
  • சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வது எப்படி?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • நாம் பேசும் விதம் ஏன் முக்கியம்?
    விழித்தெழு!—2012
  • என் தோற்றத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறேன்?
    இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
  • பகுதி 3—உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மார்ச் பக். 32

படிக்க டிப்ஸ்

பைபிள் என்ற கண்ணாடியை நன்றாகப் பயன்படுத்துங்கள்

சீஷரான யாக்கோபு பைபிளை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிட்டார். அந்தக் கண்ணாடி, உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டும். (யாக். 1:22-25) அதை நாம் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?

அவசர அவசரமாகப் பார்க்காதீர்கள். கண்ணாடியை அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு போனால், முகத்தில் ஏதாவது ஒட்டியிருந்தால் அதைக் கவனிக்காமல் போய்விடுவோம். அதேமாதிரி, நேரம் எடுத்து பைபிளைப் படிக்கவில்லை என்றால், நம் குணங்களில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதைக் கவனிக்காமல் போய்விடுவோம்.

மற்றவர்களை அல்ல, உங்களைப் பாருங்கள். கண்ணாடியைக் கொஞ்சம் திருப்பி வைத்தால் மற்றவர்களுடைய முகம் அதில் படலாம்; அவர்களுடைய குறைகள் தெரியலாம். அதேமாதிரி பைபிளைப் படிக்கும்போது மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி யோசிக்காமல் நம்மைப் பற்றி யோசிக்க வேண்டும்.

நியாயமாக இருங்கள். நம்மிடம் இருக்கும் குறைகளை மட்டுமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தால் சோர்ந்துவிடுவோம். பைபிளைப் படிக்கும்போதும் அப்படித்தான்! யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது.—யாக். 3:17.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்