மேலே இடது பக்கம்: Marek M. Berezowski/Anadolu Agency via Getty Images; கீழே இடது பக்கம்: Halfpoint Images/Moment via Getty Images; நடுவில்: Zhai Yujia/China News Service/VCG via Getty Images; மேலே வலது பக்கம்: Ismail Sen/Anadolu Agency via Getty Images; கீழே வலது பக்கம்: E+/taseffski/via Getty Images
விழிப்புடன் இருங்கள்!
2023: கவலை நிறைந்த வருஷம்—பைபிள் என்ன சொல்கிறது?
‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்லும் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை 2023-ல் நடந்த உலக சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1) நம் காலத்தில் நடக்கப்போவதாக பைபிள் முன்கூட்டியே சொன்ன சம்பவங்கள் இன்று எப்படி நடந்துவருகின்றன என்று கவனியுங்கள்.
பைபிளும் உலக சம்பவங்களும்
‘போர் முழக்கங்களும் போர்ச் செய்திகளும்.’—மத்தேயு 24:6.
“உலகத்தில் இருக்கும் நிறைய இடங்களில் சண்டைகளும் போர்களும் அதிகமாகிக்கொண்டே போகின்றன.”a
“பொதுமக்களை யார் காப்பாற்றுவார்?” மற்றும் “உலகளவில் ராணுவ செலவுகள் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியது” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
“அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கங்கள்.”—மாற்கு 13:8.
“2023 ஆரம்பித்ததிலிருந்து, 7 ரிக்டருக்கும் அதிகமான அளவில் 13 நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்றன; பதிவுகளைப் பார்க்கும்போது, இதுவரை ஒரே வருஷத்தில் இவ்வளவு நிலநடுக்கங்கள் வந்ததே இல்லை.”b
“துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
“திகிலுண்டாக்கும் காட்சிகள்.”—லூக்கா 21:11.
“பூமி வெப்பமாகும் காலம் போய், பூமி கொதிக்கும் காலம் வந்துவிட்டது.”—அன்டோனியோ குட்டரஸ், ஐ.நா.-வின் பொதுச் செயலாளர்.c
“2023 கோடைக்கால கொளுத்தும் வெயில்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
’பஞ்சங்கள்.’—மத்தேயு 24:7.
“2023: குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காக உழைக்கிறவர்கள் கவலையின் உச்சிக்கே போன இன்னொரு வருஷம்.”d
“எங்கும் உணவு தட்டுப்பாடு—போர் மற்றும் வானிலை மாற்றத்தால்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
’சமாளிக்க முடியாத அளவுக்கு படுமோசமான நிலைமை.’—2 தீமோத்தேயு 3:1.
“உலகத்தில் எட்டு பேரில் ஒருவருக்கு ஏதோவொரு விதமான மனநலப் பிரச்சினை இருக்கிறது.”e
“சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
2024 எப்படி இருக்கும்?
அது எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் உலக சம்பவங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: சீக்கிரத்திலேயே கடவுளுடைய அரசாங்கம், அதாவது பரலோக அரசாங்கம், இன்று இருக்கும் மனித அரசாங்கங்களை அழித்துவிட்டு, நம்முடைய வேதனைகளுக்கும் கவலைகளுக்கும் காரணமாக இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவுகட்டும்!—தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 21:4.
அதுவரைக்கும், நமக்குக் கவலை வந்தால் கடவுளிடம் உதவி கேட்டு, அவரையே நம்பியிருக்க வேண்டும். பைபிள் இப்படிச் சொல்கிறது:
“எனக்குப் பயமாக இருக்கும்போது உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்.”—சங்கீதம் 56:3.
நாம் கடவுளை நம்பியிருக்கிறோம் என்று எப்படிக் காட்டலாம்? வேதனையே இல்லாத ஒரு காலம் வரப்போவதாக பைபிள் கொடுக்கும் வாக்கைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்! நீங்களும் உங்களுடைய குடும்பமும் பைபிள் தரும் வாக்குறுதிகளிலிருந்து எப்படிப் பயனடையலாம் என்று தெரிந்துகொள்வதற்கு, பைபிளைப் படிக்கும் திட்டத்தை முயற்சி செய்து பாருங்கள்.
a Foreign Affairs, “A World at War: What Is Behind the Global Explosion of Violent Conflict?” by Emma Beals and Peter Salisbury, October 30, 2023.
b Earthquake News, “Year 2023: Number of Major Earthquakes on Course for Record,” May, 2023.
c United Nations, “Secretary-General’s Opening Remarks at Press Conference on Climate,” July 27, 2023.
d World Food Programme, “A Global Food Crisis.”
e World Health Organization, “World Mental Health Day 2023,” October 10, 2023.