நான் ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்தால் என்ன செய்வது?
இதையெல்லாம் செய்து பாருங்கள்:
ஆபாசத்தைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஆபாசம் கீழ்த்தரமானது. கடவுள் எதை மதிப்புள்ளதாகப் படைத்தாரோ அதைக் கொச்சைப்படுத்துகிறது. இந்த உண்மையைப் புரிந்துகொள்வது, ‘கெட்ட காரியங்களை வெறுக்க’ உங்களுக்கு உதவும்.—சங்கீதம் 97:10.
விளைவுகளை யோசியுங்கள். ஆபாசம், அதில் காட்டப்படுபவர்களையும் அதைப் பார்ப்பவர்களையும் கேவலப்படுத்துகிறது. அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.”—நீதிமொழிகள் 22:3.
தீர்மானம் எடுங்கள். “என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்” எனக் கடவுள்பக்தியுள்ள மனிதராகிய யோபு சொன்னார். (யோபு 31:1) நீங்கள் இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கலாம்:
நான் தனியாக இருக்கும்போது இன்டர்நெட்டைப் பயன்படுத்த மாட்டேன்.
இன்டர்நெட்டைப் பயன்படுத்தும்போது திடீரென ஆபாசமான ஒரு மெசேஜோ வெப்சைட்டோ வந்தால் அதை நான் உடனே மூடிவிடுவேன்.
மறுபடியும் நான் ஆபாச படத்தைப் பார்த்துவிட்டால் முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடம் பேசுவேன்.
ஆபாசத்தை எந்தளவுக்குப் பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு அதிலிருந்து விடுபடுவது கஷ்டம்
ஜெபம் செய்யுங்கள். “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று சங்கீதத்தை எழுதியவர் யெகோவா தேவனிடம் கெஞ்சிக் கேட்டார். (சங்கீதம் 119:37) நீங்கள் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்; அதனால், நீங்கள் அவரிடம் ஜெபம் செய்தால், சரியானதைச் செய்வதற்கான பலத்தை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.—பிலிப்பியர் 4:13.
யாரிடமாவது பேசுங்கள். இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நெருங்கிய நண்பரிடம் மனம்திறந்து பேசுவது முக்கியம்.—நீதிமொழிகள் 17:17.
இதை ஞாபகம் வையுங்கள்: ஒவ்வொரு முறையும் நீங்கள் ஆபாசத்தைத் தவிர்க்கும்போது உங்களுக்குப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அந்த வெற்றியைப் பற்றி யெகோவா தேவனிடம் சொல்லுங்கள்; உங்களுக்குப் பலம் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். ஆபாசத்தைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் அவருடைய இதயத்தை சந்தோஷப்படுத்துகிறீர்கள்.—நீதிமொழிகள் 27:11.