உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwhf கட்டுரை 1
  • கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி
  • குடும்ப ஸ்பெஷல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
  • நீங்கள் என்ன செய்யலாம்
  • கோபங்கொள்வது எப்பொழுதுமே தவறா?
    விழித்தெழு!—1994
  • கோபம்—அது என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • கோபத்தின் கால்தடங்கள்
    விழித்தெழு!—2012
  • கோபத்தைச் சமாளித்தல் உங்களுடையதும் மற்றவர்களுடையதும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
குடும்ப ஸ்பெஷல்
ijwhf கட்டுரை 1
தான் பாத்திரங்களைக் கழுவும்போது, தன்னுடைய கணவர் ஜாலியாக டிவி பார்ப்பதால் ஒரு பெண் கோபமாக இருக்கிறார்

குடும்ப ஸ்பெஷல்

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

உங்கள் துணை சொன்னதைக் கேட்டோ, செய்ததைப் பார்த்தோ உங்களுக்குக் கோபம் வருகிறது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க படாத பாடு படுகிறீர்கள். ஆனால், நீங்கள் எப்போதும்போல் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் துணை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உங்களைத் துளைத்தெடுக்கிறார். அதனால், உங்களுக்கு இன்னும் எரிச்சல், எரிச்சலாக வருகிறது. இந்த மாதிரி சமயங்களில், கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

  • நீங்கள் என்ன செய்யலாம்

நீங்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்

  • கோபப்படுவது உடம்புக்கு நல்லதல்ல. கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதய நோய், மனச்சோர்வு, செரிமான தொந்தரவுகள் என நோய்கள் வரிசைகட்டி வந்துவிடும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தூக்கம் வராதது, கவலை அதிகமாவது, தோல் நோய், பக்கவாதம்... என கோபப்படுவதால் வரும் பின்விளைவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். “கோபத்தை . . . விட்டுவிடு, . . . அதனால் தீமைதான் ஏற்படும்” என்று பைபிள் சொல்வதைக் கேட்டால் நமக்குத்தான் நல்லது.—சங்கீதம் 37:8, அடிக்குறிப்பு.

  • கோபத்தை அடக்கி வைத்திருப்பதும் நல்லதல்ல. அடக்கி வைக்கப்பட்ட கோபம், உள்ளுக்குள் இருந்துகொண்டே நம்மைத் தாக்குகிற ஒரு நோய் மாதிரிதான். அந்த மாதிரி கோபத்தை வளர்த்தால், உங்கள் துணையை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள், தொட்டதுக்கெல்லாம் குறை சொல்வீர்கள். இப்படி இருந்தால், உங்களோடு வாழ்வதே உங்கள் துணைக்குக் கஷ்டமாகிவிடும். உங்கள் திருமண வாழ்க்கையே ஆட்டம்காண ஆரம்பித்துவிடும்.

நீங்கள் என்ன செய்யலாம்

  • உங்கள் துணையிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பாருங்கள். உங்கள் துணையிடம் உங்களுக்குப் பிடித்த மூன்று குணங்கள் என்ன? அடுத்த தடவை அவர்மேல் உங்களுக்குக் கோபம் வரும்போது, அந்தக் குணங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, உங்கள் கோபம் கொஞ்சம் குறையலாம்.

    நியமம்: “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்”—கொலோசெயர் 3:15.

    பிஸியாக இருக்கிற மனைவி, தன்னுடைய கணவர் தனக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வதையும், தான் சொல்வதைக் காதுகொடுத்து கேட்பதையும், தனக்கு உடம்பு சரியில்லாத சமயத்தில் தன்னை அக்கறையாகக் கவனித்துக்கொள்வதையும் நினைத்துப் பார்க்கிறார்
  • மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். முதலில், உங்கள் துணையின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். இது அவர்மீது அனுதாபத்தை வளர்த்துக்கொள்ள உதவும். (1 பேதுரு 3:8) அடுத்ததாக, ‘இது மன்னிக்கவே முடியாத அளவுக்கு அவ்ளோ பெரிய தப்பா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

    நியமம்: “மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது . . . அழகு.”—நீதிமொழிகள் 19:11.

  • உங்கள் மனதில் இருப்பதை கனிவாக, பக்குவமாகச் சொல்லுங்கள். “உங்களுக்கு என்மேல கொஞ்சமாவது அக்கறை இருந்தா, எங்கே இருக்கீங்கனு போன் பண்ணி சொல்லியிருப்பீங்க” என்று சொல்வதற்குப் பதிலாக, “நீங்க வர்றதுக்கு லேட் ஆகுறப்ப, உங்களுக்கு என்ன ஆச்சோ, ஏதாச்சோனு எனக்கு பதட்டமா இருக்கு” என்று சொல்லுங்கள். மனதில் இருப்பதை மென்மையாகச் சொல்லிப் பாருங்கள், உங்கள் கோபமெல்லாம் காணாமல் போய்விடும்!

    நியமம்: “உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்”—கொலோசெயர் 4:6.

  • மரியாதையோடு கேளுங்கள். நீங்கள் பேசி முடித்த பிறகு, உங்கள் துணை சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். குறுக்கே பேசாதீர்கள். அவர் பேசி முடித்த பிறகு, அவர் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அவர் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். காதுகொடுத்து கேட்பது சின்ன விஷயம்தான். ஆனால், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அது ரொம்பவே தேவை.

    நியமம்: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.

டிம் மற்றும் ஜெனிஃபர்

“பிரச்சினை வர்றப்ப, கோபத்த மனசுக்குள்ள அடக்கி வச்சுகிட்டே இருந்தீங்கன்னா, பிரச்சினை தீராது. திரும்பத் திரும்ப அந்த பிரச்சினை வந்துகிட்டேதான் இருக்கும். அப்புறம் ஒருநாள், மனசுல இருக்குற கோபமெல்லாம் பெரிசா வெடிச்சிடும். அதனால, மரியாதையோட அதை பேசித் தீத்துக்குறதுதான் நல்லது. நானும் என் கணவரும் பிரச்சினைய பேசி முடிச்சதுக்கு அப்புறம், ‘இனி எல்லாத்தையும் மறந்துட்டு நாம மறுபடியும் ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்’னு சொல்லிக்குவோம்.”—ஜெனிஃபர், அவருடைய கணவர் டிம்.

ஜேட் மற்றும் கோரி

“என் கணவர் எப்பவுமே நான் பேசுறத பொறுமையா கேப்பாரு. நான் சொல்றதுல இருக்குற நியாயத்த புரிஞ்சுக்குவாரு. அவர்கிட்ட எனக்கு புடிச்ச விஷயத்துல இதுவும் ஒண்ணு. ஒருவேள, நான் சொல்றத அவர் ஏத்துக்கலனாகூட, அத பத்தி யோசிச்சு பாப்பாரு. ‘நீ ஏன் இப்படியெல்லாம் முட்டாள்தனமா யோசிக்கிற’ங்கிற மாதிரி பேச மாட்டாரு.”—ஜேட், அவருடைய கணவர் கோரி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்