உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwyp கட்டுரை 90
  • நெகட்டிவ் எண்ணங்களை விரட்ட...

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நெகட்டிவ் எண்ணங்களை விரட்ட...
  • இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீங்கள் எப்படிப்பட்டவர்?
  • இது ஏன் முக்கியம்?
  • நீங்கள் என்ன செய்யலாம்
  • பாசிட்டிவ் எண்ணங்களை பலப்படுத்த உதவும் விஷயங்களைப் படியுங்கள்
  • மற்றவர்களோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் என்ன செய்வது?
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • நான் சோஷியல் மீடியாவை பயன்படுத்தக் கூடாது என்று என்னுடைய அப்பா-அம்மா சொன்னால்...
    இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
  • தோல்வியை நான் எப்படி சமாளிப்பது?
    விழித்தெழு!—2004
  • பிள்ளைகளும் சோஷியல் மீடியாவும்—பகுதி 2: சோஷியல் மீடியாவை பாதுகாப்பாக பயன்படுத்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
    குடும்ப ஸ்பெஷல்
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
ijwyp கட்டுரை 90
கருமேகங்கள் தன்மேல் மழையை பொழியும்போது ஒரு பெண் நெகட்டிவாக யோசிக்கிறாள்

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நெகட்டிவ் எண்ணங்களை விரட்ட...

  • நீங்கள் எப்படிப்பட்டவர்?

  • இது ஏன் முக்கியம்?

  • நீங்கள் என்ன செய்யலாம்

  • பாசிட்டிவ் எண்ணங்களை பலப்படுத்த உதவும் விஷயங்களைப் படியுங்கள்

  • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

நீங்கள் எப்படிப்பட்டவர்?

  • நம்பிக்கையான மனநிலையோடு இருப்பவர்

    “எப்போதுமே சந்தோஷமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையுமே ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். எப்போதுமே சிரித்துக்கொண்டே ஜாலியாக வாழ்வதில் என்ன தப்பு இருக்கிறது!”—வேலரி.

  • எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவர்

    “ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால், இது கண்டிப்பா உண்மையாக இருக்காது என்றுதான் என் மனசு உடனே சொல்லும்.”—ரெபேக்கா.

  • எல்லாவற்றையும் எதார்த்தமாக பார்ப்பவர்

    “நம்பிக்கையான மனநிலையோடு இருப்பவர், தான் நினைக்கிற மாதிரி காரியங்கள் நடக்கவில்லை என்றால் ஏமாந்து போய்விடுவார். எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பவருக்கு, சந்தோஷம் சுத்தமாகவே இருக்காது. நான் எல்லாவற்றையும் எதார்த்தமாக பார்ப்பதால் ஒரு விஷயம் உண்மையிலேயே எப்படி இருக்கிறதோ அதை அப்படியே என்னால் பார்க்க முடிகிறது.”—அன்னா.

இது ஏன் முக்கியம்?

“இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 15:15) நெகட்டிவான விஷயங்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை பாசிட்டிவாக பார்க்கிறவர்கள் மற்றவர்களிடம் எப்போதுமே நல்லதை பார்ப்பார்கள், சந்தோஷமாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கலாம். எப்போது பார்த்தாலும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உம்மென்று இருக்கிறவர்களோடு ஃப்ரெண்டாக வேண்டும் என்று யார்தான் ஆசைப்படுவார்கள்!

நீங்கள் எல்லாவற்றையுமே பாசிட்டிவாக பார்த்தால் கூட வாழ்க்கையின் சில எதார்த்தங்களையும் சந்தித்துதான் ஆக வேண்டும். உதாரணத்துக்கு,

  • எங்கே திரும்பினாலும் போர், தீவிரவாதம், குற்றச்செயல் பற்றிய செய்திகளை கேள்விப்படலாம்

  • உங்கள் குடும்பத்தில் சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கலாம்

  • நீங்கள் சில விஷயங்களை சொதப்பிவிடலாம், இல்லையென்றால் சில பலவீனங்களோடு போராடிக்கொண்டு இருக்கலாம்

  • ஒரு ஃப்ரெண்டு உங்கள் மனதை கஷ்டப்படுத்தலாம்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைப்பதுபோல் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று நினைக்காதீர்கள். அதேசமயத்தில், ‘ஐயோ! இவ்வளவு பிரச்சினையா!’ என்று நினைத்து அந்தப் பிரச்சினையிலேயே மூழ்கிப் போய்விடாதீர்கள். அதற்கு பதிலாக, எல்லாவற்றையுமே எதார்த்தமாக பார்ப்பதற்கு ட்ரை பண்ணுங்கள். அப்போதுதான் உங்களால் ரொம்ப நெகட்டிவாக யோசிக்காமல் இருக்க முடியும். அதேசமயத்தில், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதைப் பார்த்து அளவுக்குமீறி சோர்ந்துபோகாமலும் இருக்க முடியும்.

மழை நின்ற பின்பு பாசிட்டிவாக உணர்கிறாள்

புயலுக்கு பின்பு பூ பூக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையில் எவ்வளவு பெரிய புயலையும் உங்களால் சமாளிக்க முடியும்.

நீங்கள் என்ன செய்யலாம்

  • உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள்.

    பைபிள் இப்படி சொல்கிறது: “பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை.” (பிரசங்கி 7:20, ERV) மனுஷர்கள் என்றாலே தவறு செய்வார்கள், சில விஷயங்களை சொதப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் எதையாவது சொதப்பிவிட்டீர்கள் என்றால் ‘நான் எதற்கும் லாயக்கில்லை’ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

    எதார்த்தமாக இருப்பது எப்படி: நீங்கள் எதை சொதப்பினீர்களோ அதை இன்னும் எப்படி நன்றாக செய்யலாம் என்று யோசியுங்கள். அதேசமயம் நீங்கள் எல்லாவற்றையுமே ‘பக்காவாக’ செய்ய முடியாது என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கேலப் என்ற ஒரு இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “செய்த தப்பைப் பற்றியே எப்போதும் யோசித்துக்கொண்டு இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணிவிட்டேன். அதற்கு பதிலாக, அந்த தப்பில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த தடவை அதை எப்படி சூப்பராக செய்யலாம் என்று யோசிக்க ட்ரை பண்ணுகிறேன்.”

  • மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

    பைபிள் இப்படிச் சொல்கிறது: “வறட்டு கௌரவம் பார்க்காமலும், ஒருவருக்கொருவர் போட்டி போடாமலும், ஒருவர்மேல் ஒருவர் வயிற்றெரிச்சல் படாமலும் இருப்போமாக.” (கலாத்தியர் 5:26) உங்களை கூப்பிடாத பார்ட்டியில் எடுத்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பார்க்கிறீர்கள். அப்படிப் பார்க்கும்போது உங்கள் ஃப்ரெண்ட்ஸ்மேல் ரொம்ப கோபமும் எரிச்சலும் வரும். உங்களுடைய உயிர் நண்பர்கள் கூட பரம விரோதிகள் மாதிரி தெரிவார்கள்.

    எதார்த்தமாக இருப்பது எப்படி: எல்லா பார்ட்டிக்கும் எல்லாருமே உங்களைக் கூப்பிட மாட்டார்கள். அதுதான் எதார்த்தம். அதுமட்டுமல்ல, யாருமே தங்கள் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையுமே சோஷியல் மீடியாவில் போஸ்ட் பண்ண மாட்டார்கள். அலக்சிஸ் என்ற டீனேஜர் இப்படிச் சொல்கிறார்: “சோஷியல் மீடியாவில் ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கிற ஸ்பெஷலான விஷயங்களை ரொம்ப ‘பில்டப்’ பண்ணி பெருசாக காட்டுவார்கள். சாதாரணமாக நடக்கிற விஷயங்களை போஸ்ட் பண்ணவே மாட்டார்கள்.”

  • சமாதானமாக இருங்கள்—முக்கியமாக குடும்பத்தில்.

    பைபிள் இப்படிச் சொல்கிறது: “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.” (ரோமர் 12:18) மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். சமாதானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களால் முடியும்.

    எதார்த்தமாக இருப்பது எப்படி: உங்கள் குடும்பத்தில் பிரச்சினை வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் நண்பர்களிடம் நீங்கள் எப்படி சமாதானமாக போவீர்களோ அதே மாதிரி குடும்பத்திலும் சமாதானமாக போங்கள். மெலின்டா என்ற டீனேஜர் இப்படிச் செல்கிறாள்: “இந்த உலகத்தில் யாருமே பெர்ஃபெக்ட் கிடையாது. சிலசமயம் மற்றவர்கள் மனசை நாமும் கஷ்டப்படுத்திவிடுவோம். அதனால் நாம் எப்படி நடந்துகொள்வோம்—சண்டை போடுவோமா அல்லது சமாதானமாக போவோமா—என்பது நம் கையில்தான் இருக்கிறது!”

  • நன்றி காட்ட கற்றுக்கொள்ளுங்கள்.

    பைபிள் இப்படிச் சொல்கிறது: “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்.” (கொலோசெயர் 3:15) நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு கெட்ட விஷயங்களைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அதற்கு பதிலாக நல்ல விஷயங்களின்மேல் கவனம் செலுத்துவீர்கள்.

    எதார்த்தமாக இருப்பது எப்படி: உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும் நல்ல விஷயங்களும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். “என் வாழ்க்கையில் நடக்கிற நல்ல விஷயங்களை தினமும் என்னுடைய டைரியில் எழுதி வைத்துக்கொள்கிறேன். அப்படி செய்வதால், என் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும் நல்ல விஷயங்களும் இருக்கிறது என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்” என்று ரெபக்கா என்ற இளம் பெண் சொல்கிறாள்.

  • உங்கள் ஃப்ரெண்ட்ஸ் யார் என்று யோசித்துப் பாருங்கள்.

    பைபிள் இப்படிச் சொல்கிறது: “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்.” (1 கொரிந்தியர் 15:33) உங்கள் ஃப்ரெண்ட்ஸ் எப்போதும் குறைக் கண்டுபிடித்து கொண்டிருந்தால்... எல்லாவற்றையும் பற்றி நெகட்டிவாகவே பேசிக்கொண்டிருந்தால்... அந்த மனப்பான்மை உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

    எதார்த்தமாக இருப்பது எப்படி: உங்கள் நண்பர்களுடைய வாழ்க்கையிலும் அவ்வப்போது கஷ்டமான காலங்கள் வரத்தான் செய்யும். அந்தச் சமயத்தில் அவர்கள் ரொம்ப சோர்ந்துபோய் இருப்பார்கள். அப்போது அவர்களை தாங்கி பிடியுங்கள். அதற்காக அவர்கள் பிரச்சினைகளை உங்கள் தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள். மிஷெல் என்ற ஒரு இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “கணக்கில் இரண்டு நெகட்டிவ் நம்பர்களை கூட்டினால் அதைவிட பெரிய நெகட்டிவ் நம்பர்தான் வரும். அதனால் நெகட்டிவாக யோசிக்கிற ஆட்களோடு மட்டுமே பழகினால் நீங்களும் நெகட்டிவாகவே யோசிப்பீர்கள்.”

பாசிட்டிவ் எண்ணங்களை பலப்படுத்த உதவும் விஷயங்களைப் படியுங்கள்

‘சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கிற’ காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) நம்மைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதால் பாசிட்டிவான மனநிலையை வளர்த்துக்கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், “கஷ்டங்கள் என்றைக்காவது தீருமா?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.

உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்

எம்மா

“சிலசமயம் நான் நெகட்டிவாகவே யோசிக்கிற மாதிரி தெரிந்தால் அதை பற்றிய நல்லதையும் கெட்டதையும் எழுதி வைத்துக்கொள்வேன். இப்படி செய்வதால் அந்தப் பிரச்சினையின் வேறொரு பக்கத்தை என்னால் பார்க்க முடிகிறது. நிறைய சமயங்களில் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிற மாதிரி தெரிந்தால் கூட அதிலும் ஏதாவது நல்லது இருக்கத்தான் செய்யும்.”—எம்மா.

ஜெசே

“நான் நெகட்டிவாகவே யோசிக்கிற மாதிரி எனக்கு தோன்றினால் எப்படியெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பிப்பேன். மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று இயேசு சொன்னார். அப்படி நான் மற்றவர்களுக்கு கொடுப்பதால் என் மனதுக்குள் இருக்கிற நெகட்டிவான எண்ணங்களை என்னால் விரட்டியடிக்க முடிகிறது.”—ஜெசே.

ஞாபகம் வருகிறதா: நெகட்டிவ் எண்ணங்களை விரட்ட...

உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள். நீங்கள் எதை சொதப்பினீர்களோ அதை இன்னும் எப்படி நன்றாக செய்யலாம் என்று யோசியுங்கள். அதேசமயம் நீங்கள் எல்லாவற்றையுமே ‘பக்காவாக’ செய்ய முடியாது என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங்களை ஒரு பார்ட்டிக்கு கூப்பிடவில்லை என்றால் எரிச்சலடையாதீர்கள், கோபப்படாதீர்கள்.

சமாதானமாக இருங்கள்—முக்கியமாக குடும்பத்தில். உங்கள் குடும்பத்தில் பிரச்சினை வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி நடந்துகொள்ளாதீர்கள். சமாதானமாக இருக்க முயற்சி பண்ணுங்கள்.

நன்றி காட்ட கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும் நல்ல விஷயங்களும் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஃப்ரெண்ட்ஸ் யார் என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினைகள் வரும்போது அதையே யோசித்து யோசித்து நொந்துபோகிற ஆட்களோடு பழகாதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்