18 யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டதால் அவர்கள் பயந்துபோய், “போன தடவை நம்முடைய பைகளில் பணம் இருந்ததென்று சொல்லி இப்போது அவர்கள் நம்மை அடித்து உதைத்து அடிமைகளாக்கிவிடுவார்கள். நம்முடைய கழுதைகளையும் பிடுங்கிக்கொள்வார்கள்!”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.