16 அதற்கு யூதா, “எங்கள் எஜமானே, உங்களிடம் என்ன சொல்வோம்? என்ன பேசுவோம்? நாங்கள் நிரபராதிகள் என்று எப்படி நிரூபிப்போம்? உங்கள் அடிமைகளாகிய நாங்கள் முன்பு தப்பு செய்ததால் இப்போது உண்மைக் கடவுள் எங்களைத் தண்டிக்கிறார்.+ இதோ, நாங்களும் இந்தக் கோப்பையை வைத்திருந்தவனும் உங்களுக்கு அடிமைகள்!” என்றார்.