14 கோதுமை அறுவடை நடந்த காலத்தில், ரூபன்+ ஒருநாள் காட்டுவெளியில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அங்கே சில பழங்களை பார்த்து, அதைக் கொண்டுவந்து தன்னுடைய அம்மா லேயாளிடம் கொடுத்தான். அப்போது ராகேல், “உன் மகன் கொண்டுவந்த பழங்களைத் தயவுசெய்து எனக்கும் கொஞ்சம் தா” என்று லேயாளிடம் கேட்டாள்.