39 காட்டு மிருகங்களிடம் சிக்கி செத்துப்போன எந்த ஆட்டையாவது நான் உங்களிடம் கொண்டுவந்தேனா?+ அந்த நஷ்டத்தை நான்தானே ஏற்றுக்கொண்டேன்? உங்களுடைய ஆடுகள் பகலில் திருடுபோயிருந்தாலும் சரி, ராத்திரியில் திருடுபோயிருந்தாலும் சரி, என்னிடம்தானே நஷ்ட ஈடு கேட்டீர்கள்?