3 ஆனால் அவர்கள், “எபிரெயர்களின் கடவுள் எங்களிடம் பேசினார். நாங்கள் மூன்று நாட்கள் பயணம் செய்து, வனாந்தரத்தில் எங்களுடைய கடவுள் யெகோவாவுக்குப் பலி செலுத்த வேண்டும், தயவுசெய்து அனுமதி கொடுங்கள்.+ இல்லையென்றால், அவர் எங்களை நோயினாலோ வாளினாலோ கொன்றுவிடுவார்” என்றார்கள்.