4 பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி நான் விட்டுவிடுவேன்.+ அவன் அவர்களைத் துரத்திக்கொண்டு வருவான். பார்வோனையும் அவனுடைய எல்லா படைகளையும் தோற்கடிப்பதன் மூலம் எனக்குப் புகழ் சேர்ப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று எகிப்தியர்கள் தெரிந்துகொள்வார்கள்”+ என்றார். அவர் சொன்னபடியே இஸ்ரவேலர்கள் செய்தார்கள்.