18 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப் மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில், புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள்.