23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாக்கின் மகன் அகோலியாப்+ அவருக்கு உதவியாக இருந்தார். கைவேலை செய்வதிலும், தையல் வேலைப்பாடு செய்வதிலும், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை ஆகியவற்றை நெய்வதிலும் இவர் திறமைசாலியாக இருந்தார்.