7 அதோடு, இன்னும் கொஞ்சம் இரத்தத்தை எடுத்து சந்திப்புக் கூடாரத்தில் யெகோவாவின் முன்னிலையில் உள்ள தூபபீடத்தின் கொம்புகளில் பூச வேண்டும்.+ மீதமுள்ள இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்குப் பக்கத்திலுள்ள தகன பலிக்கான பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட வேண்டும்.+