31 சமாதான பலியின்+ கொழுப்பை எடுப்பது போலவே அதன் கொழுப்பு முழுவதையும் குருவானவர் எடுத்து பலிபீடத்தில் எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். இப்படி, அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.