11 இரண்டு காட்டுப் புறாக்களையோ இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர அவனுக்கு வசதியில்லை என்றால், ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு+ நைசான மாவைப் பாவப் பரிகாரத்துக்கான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அதன்மேல் எண்ணெய் ஊற்றவோ சாம்பிராணியை வைக்கவோ கூடாது. அது பாவப் பரிகாரத்துக்கான காணிக்கை.