9 “இந்த எல்லா கட்டளைகளையும் ஆரோனிடமும் அவனுடைய மகன்களிடமும் நீ சொல்ல வேண்டும்: ‘தகன பலிக்கான+ சட்டம் என்னவென்றால், ராத்திரி முழுவதும் அது பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காலை வரைக்கும் அது அங்கேயே இருக்க வேண்டும். பலிபீடத்தில் நெருப்பு எரிந்துகொண்டே இருக்க வேண்டும்.