30 அபிஷேகத் தைலத்திலும்+ பலிபீடத்தின் மேலுள்ள இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, அவற்றை ஆரோன்மேலும் அவருடைய உடைகள்மேலும் அவருடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகள்மேலும் மோசே தெளித்தார். இப்படி, ஆரோனையும் அவருடைய உடைகளையும், அவருடைய மகன்களையும்+ அவர்களுடைய உடைகளையும்+ புனிதப்படுத்தினார்.